இந்திய அணிக்கு பயிற்சியளிக்கப் போவது இந்த 6 பேரில் ஒருவர்தான்! - ஆகஸ்ட் 16 நேர்காணல்

விளையாட்டு
Updated Aug 13, 2019 | 09:17 IST | Times Now

வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதற்காக 2000 விண்ணப்பங்களில் இருந்து 6 பேர் தேர்வாகி உள்ளனர்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி  |  Photo Credit: PTI

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் சாந்தா ரங்கசாமி, அன்ஷிமன் கெய்க்வாட் உள்ளிட்ட ஒரு தேர்வுக் குழு அமைக்கப்பட்டு இந்த தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பையுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர், ஃபீல்டிங் கோச் ஸ்ரீதார், பௌலிங் கோச் பரத் அருண் ஆகியோரது பதவிக்காலம் முடிந்ததை அடுத்து ஜூலை 30 தேதி வரை இந்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இதில் தற்போது தேர்வுக் குழு, தலைமைப் பயிற்சியாளருக்கான நபரை வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேர்வு செய்யவிருக்கிறது. இதற்காக சுமார் 2000 விண்ணப்பங்களில் 6 பேரை இறுதியாக அந்தக் குழு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த 6 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்ட பின்னர் தேர்வுக் குழு யார் பயிற்சியாளர் என்ற முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேர்காணலுக்கு ரவி சாஸ்திரி,  ஆஸ்திரேலியாவின் டாம் மூடி (இவர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்துக்கும் இலங்கை அணிக்கும் பயிற்சியாளராக இருந்தவர்),  நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆப்கானிஸ்தான் முன்னால் பயிற்சியாளரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டருமான பில் சைமன்ஸ், இந்தியாவில் இருந்து ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

தேர்வாகியுள்ள கிரிக்கெட்டர்கள்: 

ரவி சாஸ்திரி, 
மைக் ஹெசன், 
டாம் மூடி, 
ராபின் சிங், 
பில் சைமன்ஸ், 
லால்சந்த் ராஜ்புத்

NEXT STORY
இந்திய அணிக்கு பயிற்சியளிக்கப் போவது இந்த 6 பேரில் ஒருவர்தான்! - ஆகஸ்ட் 16 நேர்காணல் Description: வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளருக்கான நேர்காணல் நடைபெறுகிறது. இதற்காக 2000 விண்ணப்பங்களில் இருந்து 6 பேர் தேர்வாகி உள்ளனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...