இந்திய அணியின் புதிய 'ஜெர்சி' சர்ச்சை.. பயிற்சியாளர் பரத் அருணின் விளக்கம் இதுதான்!

விளையாட்டு
Updated Jun 27, 2019 | 15:22 IST | Times Now

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர் என்பது குறித்து பயிற்சியாளர் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.

Indian Bowling Coach Bharat Arun
பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்  |  Photo Credit: AP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 30-ஆம் தேதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கும் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாட  உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, 'எந்த நிற ஜெர்சியை அணியப்போகிறோம் என்று எல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை, எங்கள் முழு கவனமும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் மட்டுமே உள்ளது' என்று கூறினார். மேலும் நீல நிறமே பிரதான நிறமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சியையும் பா.ஜ.க அரசையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டரா சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ.கான் கடுமையாக விமர்சித்துள்ளார். 'இந்த அரசாங்கம் நம் நாட்டை காவிமயமாக்க முயற்சி செய்து வருகிறது' என அவர் தெரிவித்தார். மேலும் எதிர்க்கட்சியை சேர்ந்த பல்வேறு நபர்கள் இந்த ஜெர்சியை கண்டித்துள்ளனர்.

 

   

இந்திய அணியின் ஜெர்சி நிறத்தை பி.சி.சி.ஐ வாரியமே தேர்வு செய்ததாகவும், இந்திய அணியின் முந்தைய டி-20 ஜெர்சி போலவே இந்த ஜெர்சி அமைந்துள்ளது எனவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது. 'மென் இன் ப்ளூ' என அழைக்கப்படும் இந்திய அணி, ஜூன் 30-ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் எந்த நிற ஜெர்சி அணியப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.            

NEXT STORY
இந்திய அணியின் புதிய 'ஜெர்சி' சர்ச்சை.. பயிற்சியாளர் பரத் அருணின் விளக்கம் இதுதான்! Description: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் எந்த நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர் என்பது குறித்து பயிற்சியாளர் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola