INDvWI: விராட் கோலி அபார சதம்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!

விளையாட்டு
Updated Aug 12, 2019 | 10:51 IST | Times Now

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.

India wins 2nd ODI against West indies
இந்திய அணி வெற்றி   |  Photo Credit: AP

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது.     

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து 2-வது போட்டி நேற்று போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 125 பந்துகளில் 120 ரன்கள் அடித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன் 42-வது சதத்தை பதித்தார். மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் 68 பந்துகளில் 71 ரன்கள் அடித்து நேற்று நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா(18), பண்ட்(20), ஜாதவ்(16) ஆகியோர் நன்கு தொடங்கிய போதும், பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினர். இறுதியாக 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்களை குவித்தது இந்திய அணி. 

இதனைத் தொடர்ந்து 280 ரன்கள் இலக்குடன் களம் இறங்கியது வெஸ்ட் இண்டீஸ். ஆரம்பத்தில் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கிய அந்த அணி, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது. எவின் லூயிஸ் (65)  மற்றும் நிக்கோலஸ் பூரான் (42) மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கையான ஆட்டத்தை நேற்று வெளிப்படுத்தினர். போட்டியின் நடுவே மழை குறிக்கிட்டதால் 46 ஓவர்களில் 270 இலக்கு என்று மாற்றி அமைத்தபோதும், வெஸ்ட் இண்டீஸ் அணியால் நேற்று வெற்றி பெற முடியவில்லை. மேலும் அணியில் மற்றவர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது வெஸ்ட் இண்டீஸ் அணி. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும் ஷமி, குலதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் ஜடேஜா, கலீல் அகமது தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னணியில் உள்ளது இந்திய அணி. தன் அபார ஆட்டத்திற்காக விராட் கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.                                  

       

NEXT STORY
INDvWI: விராட் கோலி அபார சதம்: 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி! Description: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola