INDvNZ World Cup Live: இந்தியா தோல்வி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து!

விளையாட்டு
Updated Jul 10, 2019 | 19:27 IST | Times Now

நேற்று மழையால் நின்றுபோன இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி இன்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது.

India vs New Zealand Semi-final LIVE Score
India vs New Zealand Semi-final LIVE Score pic: ICC  |  Photo Credit: Twitter

லீக் போட்டிகள் முடிந்த நிலையில் உலகக்கோப்பையின் அரையிறுதிச் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று முதல் அரையிறுதிச் சுற்றான இந்தியா - நியூசிலாந்து போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் முதலில் பேட்டிங் செய்யப்போகும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.

ஆட்டம் துவங்கியது முதலே இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் துவக்க வீரர் மார்டின் குப்டில் 14 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக இருந்தது. நிக்கோல்ஸ் 28, கேன் வில்லியம்சன் 67,  நீஷம் 12, கிராண்ட்ஹோம் 16 ரன்னில் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து களத்தில் நின்றார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது. நீண்ட நேரமாகியும் மழையும் விட்டபாடில்லை. 

நேற்றைய போட்டியில் மழை தொடர்ந்து பெய்ததால், போட்டி நேற்று நிறுத்தப்பட்டு இன்று மீண்டும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்று 3:00 மணிக்கு நியூசிலாந்து மீதமிருக்கும் 3.5 ஓவர்களை விளையாடும். அதன்பின் இந்திய அணி 50 ஓவர் விளையாடத் தொடங்கும். மேட்ச் லைவ் இங்கே... நேற்றைய போட்டியின் லைவ் ரிப்போர்ட்டை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்...

7:25 PM: கடைசி ஓவரில் 23 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய பும்ரா மூன்று பந்துகள் மீதமிருக்கையில் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த உலகக்கோப்பையில் இறுதுச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. மற்றுமொரு செமி ஃபைனலில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. அதில் வெற்றி பெற்ற அணியோடு வரும் ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து இறுதிச்சுற்றுக்கு செல்லுகிறது. 

7:19 PM: தோனி அவுட்! 50 அடித்து தோனி ஸ்டம்ப் அவுட் ஆகி வெளியேறினார். மேட்ச் கிட்டத்தட்ட கையை விட்டு நழுவியது

7:13 PM: 77 ரன்கள் எடுத்த ஜடேஜா வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார். வெல் டன் ஜடேஜா! தற்போது ஸ்கோர் 208/7. இன்னும் 13 பதுகளில் 37 ரன்கள் தேவை

7:01 PM: தோனியும் ஜடேஜாவும் இணைந்து 100 ரன்கள் அடித்துள்ளனர். 46 ஓவர் முடிவில் இந்தியா 196-6

6:57 PM: 45 ஓவர் முடிவில் 188/6 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் விளாசியுள்ளார். 

6:51 PM: இரண்டு முறை ஜடேஜா கேட்சில் இருந்து தப்பியுள்ளார்! 37 பந்துகளில் 64 ரன்கள் எடுக்கவேண்டும் இந்தியா

6:45 PM: 47 பந்துகளில் 71 ரன்கள் தேவை. ஸ்கோர் 169-6

6:41 PM: ஒளி தெரிகிறது! மற்றுமொரு ஃபோர் அடித்து ஜடேஜா அரை சதம் அடித்தார். ஸ்கோர் 166-6

6:37 PM: 41 ஓவர் முடிவில் இந்தியா 159! ஜடேஜா சிறப்பாக ஆடி ஒரு சிக்ஸ் அடித்தார்

6:33 PM: 40 ஓவர் முடிவில் 150 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. தோனியும் ஜட்டுவும் சரிவில் இருந்து சற்றே மீட்டுள்ளார்கள். 

6:27 PM:  67 பந்துகளில் 100 ரன்கள் தேவை! 

 

 

6:25 PM: 38 ஓவர் முடிவில் 131-6 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. தற்போது ஒரு ஓவருக்கு குறைந்தது 9 ரன்களாவது எடுக்க வேண்டும். 

6:15 PM: 36 ஓவர் முடிவில் இந்திய அணி 123-6 என்ற நிலையில் உள்ளது. தோனியும் ஜடேஜாவும் நிதானமாக ஆடி வருகிறார்கள்.

6:10 PM: இந்திய அணிக்கு 92 பந்துகளில் 122 ரன்கள் தேவை.

6:10 PM: ஒரு வழியாக இந்தியா சற்று ரன்களை சேர்க்கத்துவங்கி உள்ளது. 33 ஓவர் முடிவில் 114-6, ஜடேஜா 11, தோனி 19

6:00 PM: அப்பாடா... ஜடேஜா இந்த இன்னிங்ஸின் முதல் சிக்ஸை அடித்திருக்கிறார். இதனால் இந்திய அணி 100 ரன்களைக் கடந்துள்ளது. 

6:00 PM:  ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜடேஜா வந்திருக்கிறார். அவருடன் இணைந்து இருக்கிறார் தோனி. சி.எஸ்.கேவுக்கு நடந்த மேஜிக்குகள் இங்கும் நடக்குமா என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 32 ஓவர் முடிவில் ஸ்கோர் 97-6

5:48 PM: அவுட்! ஹர்திக் பாண்டிய 32 ரன்களில் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து விடை பெற்றார். சாண்ட்னருக்கு இது 2வது விக்கெட். இந்தியா 92-6

5:47 PM: 30 ஓவர் முடிவில் இந்திய அணி 92 ரன்கள் எடுத்துள்ளாது. தற்போது 120 பந்துகளில் 148 ரன்கள் எடுக்கவேண்டும். 

5:43 PM: கடைசி 9 ஓவர்களில் இந்திய அணி வெறும் 15 ரன்களே எடுத்துள்ளது. எனினும் தோனி இருப்பதால் சற்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். தற்போது 29 ஓவர் முடிவில் 85-5

5:33 PM: 138 பந்துகளில் 158 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. 27 ஓவர் முடிவில் 82-5 இந்தியா இருக்கிறது. இதே ரன்களில்தான் நியூசியும் இருந்தது. ஆனால் இந்திய அணி கூடுதலாக 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

5:25 PM: 24 ஓவர் முடிவில் 75-5 எடுத்துள்ளது இந்திய அணி. தற்போது ஹர்திக் பாண்டியாவும் தோனியும் விளையாடி வருகிறார்கள். 

5:18 PM: பண்ட் அவுட்! 5வது விக்கெட்டை இழந்தது இந்தியா. பண்ட் 32 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து தோனி களம் இறங்குகிறார். தற்போதைய ஸ்கோர் 71-5 

 

 

5:03 PM: இந்த இடத்தில் நியூசிலாந்து 70 ரன்களுடன் 2 விக்கெட் இழந்துள்ளது. ஆனால் இந்திய அணி 62 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ரன்கள் குறைவாக இருப்பதோடு 2 விக்கெட்டுகளையும் கூடுதலாக இழந்துள்ளது இந்திய அணி. 20 ஓவரில் 70-4

5:00 PM: 18 ஓவரில் 10 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி. தற்போதைய ஸ்கோர் 60-4 ஆக உள்ளது. 

4:50 PM: 17ஓவரில் 50 ரன்களைக் கடந்தது இந்தியா. பாண்டியா 12 ரன்களும் பண்ட் 24 ரன்களும் எடுத்துள்ளனர். 

4:30 PM: 10வது ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தாலும் பாண்டியாவும் பண்டும் சுதாரித்து சற்று நிதானமாக ஆடி வருகிறார்கள். 14 ஓவர் முடிவில் இந்திய அணி 42-4. பண்ட் 3 ஃபோரும், பாண்டியா 2 ஃபோரும் அடித்துள்ளார்கள்.

4:18 PM:  அவுட்!  4வது ஓவரிலேயே வெறும் 5 ரன்கள் இருக்கையில் இந்திய அணி பெரிய விக்கெட்டுகளான ரோகித், கோலி, ராகுல் என மூவரை இழந்த நிலையில் தற்போது 10வது ஓவரில் தினேஷ் கார்த்திக்கும் அவுட் ஆகி வெளியேறினார். 10 ஓவர் முடிவில் இந்திய அணி 24-4 

4:15 PM: 9வது ஓவர் முடிவில் இந்திய அணி 19 ரன்கள் அடித்துள்ளது. தினேஷ் கார்த்திக் தனது முதல் பௌண்டரியை பதிவு செய்தார். 

4:10 PM: பண்ட் சற்று நிதானமாக ஆடி வருகிறார். 8 ஓவர் முடிவில் இந்திய அணி 13 ரன்களை எடுத்துள்ளது.

4:00 PM: இந்திய அணி தனது முதல் பவுண்டரியை அடித்தது. ரிஷம் பண்ட் பவுண்டரி அடித்து ஸ்கோரை 10ஆக உயர்த்தியுள்ளார். 

4:00 PM: 5 ஓவர் முடிவில் 6 ரன்கள் மெட்டுமே இந்திய அணி எடுத்துள்ளது. 

3:50 PM:  கோலி வெளியேறிய நிலையில் ராகுலும் அவுட் ஆனார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தற்போது அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் ஆடி வருகிறார். 4 ஓவர் முடிவில் இந்திய அணி 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

3:43 PM:  கோலியும் அவுட்! ரோஹித் அவுட் ஆன நிலையில் களமிறங்கிய கோலி முதல் ரன் எடுத்திருக்கையில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். 

3:38 PM:  இரண்டாவது ஓவரை ஹென்ரி வீசிவருகிறார். ரோகித் அவுட்! ரெண்டாவது ஓவரில் ஹென்ரி வீசிய பந்தில் லேதமிடம் கேட்ச் கொடுத்து ரோஹித் சர்மா அவுட் ஆனார். 

 3:37 PM:  இந்திய அணி முதல் ஓவரில் 2 ரன்கள் எடுத்துள்ளது. 

3:35 PM:  இடைவேளை முடிந்து இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ஹிட்மேட் ரோஹித் ஷர்மாவும் ராகுலும் களமிறங்கினர். முதல் ஓவரை போல்ட் வீசிவருகிறார். 

3:22 PM: கடைசி ஓவர் முடிவில் நியூசிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 240 ரன்கள் டார்கெட். சரியாக 10 நிமிடங்கள் கழித்து இந்திய அணியின் இன்னிங்க்ஸ் தொடங்கும்... 

 

 

3:20 PM: டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா 50 வது ஓவரை வீசி வருகிறார். 

3:15 PM: மீண்டும் ஒரு விக்கெட்! 49வது ஓவரில் கடைசி பாலில் புவனேஷ்குமார் போட்ட பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து கிளம்பினார் ஹெண்ட்ரி! தற்போது போல்டும் சாண்ட்னரும் விளையாடி வருகிறார்கள். 

3:10 PM:  அவுட்! பும்ப்ரா ஓவரில் ஜடேஜா பந்தை ஸ்டம்புக்கு த்ரோ செய்து டெய்லரை ரன் அவுட் செய்தார். அவருக்கு பதிலாக சாண்ட்னர் வந்துள்ளார். டெய்லர் 74 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 49வது ஓவரை புவனேஷ்குமார் தொடங்க மீண்டும் ஒரு விக்கெட்! லேதம் 10 ரன்களில் ஜேடேஜாவிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார்.

3:10 PM:  லண்டனில் இப்போது மணி காலை 10:30. மதியம் ஒரு மணிக்கு லேசான மழை பெய்யும் என்பதால் இன்னிங்க்ஸ் இடைவேளை 10 நிமிடம் மட்டும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3:05 PM:  48வது ஓவரை பும்ரா வீசுகிறார். தற்போது லேதமும் டெய்லரும் ஆடி வருகிறார்கள். 

3:05 PM:  47வது ஓவரில் 8 ரன்கள் அடித்து, ஓவர் முடிவில் நியூசி 217 ரன்கள் எடுத்துள்ளது. 

3:00 PM: அரையிறுதிப் போட்டியின் 2ஆம் நாள் போட்டி துவங்கியது. மைதானத்துக்குள் வீரர்கள் வந்தனர். 47வது ஓவரை புவனேஷ்குமார் வீசுகிறார். 

2:50 PM:  போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் ஒரிசாவைச் சேர்ந்த மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்திய அணியை வாழ்த்தி மணற் சிற்பம் செய்து ட்வீட் செய்திருக்கிறார். 

 


 

 

2:40 PM:  எதிர்பாராத  விதமாக மழைக் குறுக்கிடு பட்சத்தில் நேரத்தைப் பொறுத்து கீழே இருக்கும் ஏதாவதொரு ஓவர் கணக்கில் இந்தியா விளையாட வேண்டும். அப்படி இன்றும் மேட்ச் தடைபட்டால், ஏற்கனவே எடுத்திருக்கும் புள்ளிகள் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். 

-    46 ஓவருக்கு 237 ரன்கள்

-    40 ஓவருக்கு 223 ரன்கள்

-    35 ஓவருக்கு 209 ரன்கள்

-    30 ஓவருக்கு 192 ரன்கள்

-    25 ஓவருக்கு 172 ரன்கள்

2:30 PM: மைதானம் இருக்கும் இடத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருக்குமா என்று வானிலையை பரிசோதித்த நிபுணர்கள் இன்று மழைக்கு 0% தான் வாய்ப்பு என்று தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

2:10 PM:  நேற்று தடைபட்ட போட்டி மீண்டும் 3:00 மணிக்கு துவங்க இருக்கிறது. நியூசிலாந்து இன்னும் 3.5 ஓவர்களை விளையாடிய பிறகே மொத்த ரன்கள் கணக்கெடுக்கப்படு, இந்திய அணி பேட்டிங் துவங்கும். நியூசிலாந்து 211 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. நேற்று நியூசிலாந்தின் அனுமானிக்கப்பட்ட ஸ்கோர் 250க்குள் ஆகும். 

2:00 PM: நேற்று மேட்ச் பார்க்க வந்தவர்கள் அந்த டிக்கெட்டை வைத்தே இன்றும் மேட்ச் பார்க்கலாம் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

NEXT STORY
INDvNZ World Cup Live: இந்தியா தோல்வி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து! Description: நேற்று மழையால் நின்றுபோன இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி இன்று மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola