உலகக்கோப்பை: மழை பெய்துகொண்டே இருந்தால் என்ன நடக்கும்?

விளையாட்டு
Updated Jul 09, 2019 | 20:01 IST | Times Now

இதுவரை லீக் போட்டியில் மழை என்றால் ஆளுக்கொரு பாயிண்ட் பிரித்துக் கொடுக்கப்படும், ஆனால் இன்று நடைபெறும் போட்டி அரையிறுதிப் போட்டியில் மழை தொடர்ந்தால்?

Rain in semifinal 1 match IND VS NZ
Rain in semifinal 1 match IND VS NZ   |  Photo Credit: AP

45 லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இன்று முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணியும், நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்தும் மோதின. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வந்த நிலையில் கடைசி 3 ஓவரே இருக்கும்போது மழை குறுக்கிட்டதால் தற்போது போட்டி நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. 46.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 211 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதால் போட்டி என்னவாகும் என்று ரசிகர்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது. இதுவரை லீக் போட்டியில் மழை என்றால் ஆளுக்கொரு பாயிண்ட் பிரித்துக் கொடுக்கப்படும், ஆனால் இன்று நடைபெறும் போட்டி அரையிறுதிப் போட்டி, இன்று வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் விளையாடும். அதனால் ஒரே ஒரு அணிக்கு மட்டுமே இந்த வாய்ப்பு உள்ளது.

மழை தொடர்ந்தால்?

மழை சிறிது நேரத்தில் விட்டுவிடும் என்றால், 46 ஓவரில் இந்திய அணி 237 ரன்கள் அடிக்கவேண்டும் என்று டார்கெட் கொடுக்கப்படும். இல்லை இது ரிசர்வ் டே என்று தீர்மானித்தால் மேட்ச் இன்று நிறுத்தப்பட்டு நாளை நியூசிலாந்து விட்ட இடத்தில் இருந்து தொடங்கும். அதாவது 46.2 ஓவரில் தொடங்கும். இதேபோல மற்றொரு முறையும் பேசப்பட்டு வருகிறது. அதாவது டி.எல்.எஸ் முறைப்படி தற்போது 20 ஓவருக்கு மேட்சைக் குறைத்து இந்திய அணி 148 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற முறையைப் பயன்படுத்தலாம என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

ஆனால் நாளையும் மழை தொடர்ந்தால், ஒரு வேளை போட்டி கைவிடப்படும் என்ற நிலைமை ஏற்பட்டால் இதுவரை அணிகள் பெற்றிருக்கும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு ஒரு அணி தேர்ந்தெடுக்கப்படும். அப்படிப் பார்த்தாலும் இந்திய அணியே அதிகப் புள்ளிகள் பெற்றுள்ளது. அதனால் நேரடியாக இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் சென்று விடும். 
 

NEXT STORY
உலகக்கோப்பை: மழை பெய்துகொண்டே இருந்தால் என்ன நடக்கும்? Description: இதுவரை லீக் போட்டியில் மழை என்றால் ஆளுக்கொரு பாயிண்ட் பிரித்துக் கொடுக்கப்படும், ஆனால் இன்று நடைபெறும் போட்டி அரையிறுதிப் போட்டியில் மழை தொடர்ந்தால்?
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola