IND vs BAN டெஸ்ட்: 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 343 ரன்கள் முன்னிலை!

விளையாட்டு
Updated Nov 15, 2019 | 19:03 IST | Times Now

மயங்க் அகர்வால் 243 ரன்களில் ஆட்டமிழக்க  ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதம் 25 ரன்களுடனும் ஆடமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

India vs Bangladesh 1st Test Day 2
India vs Bangladesh 1st Test Day 2  |  Photo Credit: Twitter

 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அனி 493 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் 343 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம் அணி, இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

வங்கதேச அணியினரின் பேட்டிங்கை தொடா்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோர் ஓபனிங் வீரர்களாக களம் இறங்கினர். இந்தியாவுக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது போல 6 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தாா். முதல் நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 86 ரன்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில் 2ஆம் நாளில் இன்று தந்து பேட்டிகைத் தொடர்ந்தது இந்திய அணி. புஜாரா 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அதன்பின் வந்த கேப்டன் கோலி ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஆனால் அதன்பின் வந்த அஜின்க்யா ரஹானே நிதானமாக ஆடி 86 ரன்கள் அடித்தார். மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்து அதிரடி காட்டினார். அவருடன் இணைந்த ஜடேஜாவும் ரன்களைக் குவித்தார். மயங்க் அகர்வால் 243 ரன்களில் ஆட்டமிழக்க  ஜடேஜா 60 ரன்களுடனும் உமேஷ் யாதம் 25 ரன்களுடனும் ஆடமிழக்காமல் களத்தில் உள்ளனர். இன்று மட்டும் இந்திய அணி 407 ரன்கள் குவித்துள்ளது. மொத்தம் ஆறு விக்கெட்டை இழந்து 493 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, வங்கதேச அணியை விட 343 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

NEXT STORY