இந்தூர் டெஸ்ட்.. இந்தியா நிதான ஆட்டம்.. புஜாரா, மயங்க் அகர்வால் அசத்தல்

விளையாட்டு
சு.கார்த்திகேயன்
Updated Nov 14, 2019 | 22:16 IST

வங்கதேசத்து எதிரான முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மயங்க் அகர்வால் 37, புஜாரா 43 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

Mayank Agarwal and Cheteshwar Pujara
Mayank Agarwal and Cheteshwar Pujara  |  Photo Credit: Twitter

இந்தூர்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம் அணி, இந்திய அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மொமினுல் ஹக் 37 ரன்களும், முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்களும் எடுத்து அவுட்டாகி இருந்தனா். 

வங்கதேச அணியினரின் பேட்டிங்கை தொடா்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஆகியோர் ஓபனிங் வீரர்களாக களம் இறங்கினர். இந்தியாவுக்கு தொடக்கத்திலே அதிர்ச்சி காத்திருந்தது போல 6 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தாா். அடுத்து வந்த புஜாரா அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா்.  இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 86 ரன்கள் எடுத்துள்ளது. 

மயங்க் அகர்வால் 37, புஜாரா 43 ரன்களுடன் களத்தில் உள்ளனா். முதல் இன்னிங்சில் இந்திய அணி தற்போது 64 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் 9 விக்கெட்டுகள் கையில் இருக்கும் நிலையில் நாளை முழுவதும் இந்தியா பேட்டிங் செய்தால் 400 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது. 

NEXT STORY