இந்தியா - தென்னாபிரிக்க அணியின் முதல் டி-20 - மழையால் ரத்து!

விளையாட்டு
Updated Sep 16, 2019 | 07:34 IST | Times Now

நேற்று ஹிமாச்சல பிரதேசத்தில் தொடங்கப்பட்ட இந்தியா-தென்னாபிரிக்க அணியின் முதல் டி-20 போட்டி மழையால் ரத்தானது.

India versus South Africa T20I series washes out due to rain
India versus South Africa T20I series washes out due to rain  |  Photo Credit: AP

குயிண்டன் டி-காக் தலைமையிலான தென்னாப்பிரிக்கா ஆணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20, 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் ஆகிய போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் 3 டி-20 போட்டிகளில் முதல் போட்டி நேற்று மாலை 7 மணிக்கு இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் தொடங்கியது. 

ஆனால் மாலை முதலே அங்கு நல்ல மழை பெய்தது, இதனால் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மழை பெய்துவந்ததால், டாஸ் கூட போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2வது டி-20 போட்டி வரும் புதன்கிழமை சண்டிகரில் நடைபெற இருக்கிறது. இதுபற்றி ட்வீட் செய்த பிசிசிஐ மழை தொடர்ந்து வருவதால் போட்டி அதிகாரப்பூர்வமான ரத்து செய்யப்படுகிறது. அடுத்த போட்டிக்கு சண்டிகரில் சந்திக்கிறோம் என்று கூறியுள்ளது.  

 

 

ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் வீரர்கள் மைதானத்தில் வலைப் பயிற்சிகளையும் செய்ய இயலவில்லை. உள் அரங்கில்தான் பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY