INDvsSA:மயங்க் அகர்வால் அபார சதம்; முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா!

விளையாட்டு
Updated Oct 10, 2019 | 18:44 IST | Times Now

மயங்க் அகர்வால் அபார சதம் அடிக்க கோலி (63*) மற்றும் புஜாரா(58) அரைசதம் அடித்தனர்.

முதல் நாள் முடிவில் 273/3 அடித்து இந்தியா ஆதிக்கம்,India dominates on Day 1 by posting 273/3
முதல் நாள் முடிவில் 273/3 அடித்து இந்தியா ஆதிக்கம்  |  Photo Credit: Twitter

புனே: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்துள்ளது.

புனேவில் உள்ள மஹாஸ்டரா கிரிக்கெட் சங்கம் மைதானத்தின் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியது. டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் ஷர்மா களம் இறங்கினர். முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரோஹித் ஷர்மா இன்று 14 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். 

பின்னர் களம் இறங்கிய புஜாராவும் மயங்க் அகர்வாலும் நிதானமாக ஆடினார். புஜாரா அரைசதம் அடித்து இறுதியாக 58 ரன்களில் ரபாடா பந்தில் அவுட் ஆக விராட் கோலி களத்திற்கு வந்தார். முதல் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மயங்க் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் அவரும் 108 ரன்களில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் கோலியும் ரஹானேவும் நிதானமாக விளையாட, கோலியும் அரைசதம் அடித்தார். இறுதியாக முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 273/3 ரன்கள் அடிக்க விராட் கோலி (63*) மற்றும் அஜின்க்யா ரஹானே (18*) ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.   

 

 

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 3 விக்கெட்டிகளையும் வீழ்த்தினார். முதல் டெஸ்ட் போட்டியை போலவே இந்த போட்டியிலும் முதல் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியுள்ளது.       

NEXT STORY
INDvsSA:மயங்க் அகர்வால் அபார சதம்; முதல் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் இந்தியா! Description: மயங்க் அகர்வால் அபார சதம் அடிக்க கோலி (63*) மற்றும் புஜாரா(58) அரைசதம் அடித்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola