2வது டெஸ்டில் வெற்றி - தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!

விளையாட்டு
Updated Oct 13, 2019 | 16:21 IST | Times Now

137 ரன்கள் வித்தியாசத்தில் 2வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றுள்ளது.

India defeated South Africa by an innings and 137 runs to win the second Test
2வது டெஸ்டில் வெற்றி - தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!  |  Photo Credit: Twitter

3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 601/5 ரன்களுக்கு டிக்ளேர் செய்யதது. அதிகபட்சமாக விராட் கோலி 254* ரன்கள் அடித்து அசத்தினர். பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு ஆல் அவுட். 

இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 326 ரன்கள் முன்னிலை பெற்றது. 4ஆம் நாள் ஆட்டமான இன்று எதிர்பார்த்தது போலவே இந்திய அணி ஃபாலோ ஆன் வழங்கியது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சர்மா ஒரு விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா, உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதன் மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் 2வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று தற்போது இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. மேலும் டெஸ்ட் சேம்பியன்ஷிப் தரவரைசைப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...