ஆறு விக்கெட்டை வீழ்த்தி தீபக் சாஹர் அபாரம்; தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

விளையாட்டு
Updated Nov 11, 2019 | 11:15 IST | Times Now, Agencies

டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே இந்தியர் என்ற சாதனையையும் தீபக் சாஹர் பெற்றார். 

தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
தொடரைக் கைப்பற்றிய இந்தியா!  |  Photo Credit: Twitter

நாக்பூரில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணியுடனான 3வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் பிடித்த இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவையும் தவானையும் களம் இறக்கியது. சென்ற ஆட்டம்போலவே இந்த முறையும் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். தவான் 19 ரன்களில் ஆட்டமிழக்க அதன் பிறகு வந்த ராகுலும் ஸ்ரேயாஸ் ஐயரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ராகும் 52 ரன்கள்களும் ஸ்ரேயாஸ் 62 ரன்களும் விளாசினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 174 ரன்கள் எடுத்தது.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு வங்கதேச அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மொஹமத் நெய்ம் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் விளையாடினாலும் தீபக் சாஹரின் அபாரமான பந்துவீச்சில் மறுமுனையில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகிக்கொண்டே இருந்தார்கள். 

இறுதியில் 19.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்து தொடரை இழந்தது வங்கதேச அணி. மொத்தம் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாகருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது அவருக்கே வழங்கப்பட்டது. மேலும் டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே இந்தியர் என்ற சாதனையையும் தீபக் சாஹர் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் வெற்றிபெற்றதால் 3 போட்டிகள் கொண்ட டி20 சீரிஸை வென்றுள்ளது இந்தியா.
 

NEXT STORY