தவான் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி

விளையாட்டு
Updated Jun 10, 2019 | 08:35 IST | Times Now

இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 117 ரன்கள் குவித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

India won by 36 runs
India won by 36 runs  |  Photo Credit: Twitter

ஓவல்: உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

உலகக்கோப்பை தொடரின் 14-வது லீக் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் விராட் கோலி. 

துவக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும்  களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்ட போதிலும் ரோகித் சர்மா 57 ரன்னில் அவுட்டாகினார். 109 பந்துகளை சந்தித்த தவான், 16 பவுண்டரியுடன் 117 ரன்கள் குவித்து மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  

அடுத்து விராட் கோலி 82 ரன்கள் எடுத்து மிரட்டினார். 4-வது வீரராக களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். தொடர்ந்து களமிறங்கிய தோனி 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். ராகுல்11 ரன்களுடனும் கேதர் ஜாதவ் ரன்எடுக்காமல் களத்தில் இருந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்கள் குவித்தது.

353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இருப்பினும் 13 ஓவர்கள் வரை விக்கெட் இழக்காமல் 60 ரன்கள் சேர்த்திருந்தது ஆஸ்திரேலியா. பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத்தொடங்கின.

ஆரோன் பிஞ்ச் 36 ரன்னில் அவுட்டானார். வார்னர் 56 ரன்னிலும், ஸ்டீவன் சுமித் 69 ரன்னிலும் நடையை கட்டினர். கவாஜா 42 ரன்கள் விளாசி பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸ்டாய்னிஸ் 0, மேக்ஸ்வெல் 28,  என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா. 50 ஓவர்களில் 316 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் அலெக்ஸ் கேரி மட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சாஹல் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது 117 ரன்கள் குவித்த ஷிகர் தவானுக்கு வழங்கப்பட்டது. 


 

NEXT STORY
தவான் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி Description: இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 117 ரன்கள் குவித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola