’கிங்’ ஆன விராத் கோஹ்லி; பொங்கிய மைக்கேல் வாகன்-ஒரே பதிலில் அடக்கிய ஐசிசி!

விளையாட்டு
Updated Jun 06, 2019 | 21:12 IST | Times Now

நேற்று உலகக்கோப்பைக்கான முதல் ஆட்டத்தை தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி சந்தித்த நிலையில், முன்னதாக இந்த புகைப்படத்தை வெளியிட்டது ஐசிசி. 

world cup, உலகக்கோப்பை
களத்தில் விராத் கோஹ்லி  |  Photo Credit: Twitter

டெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அணியை வழிநடத்தும் இந்திய கேப்டன் விராத் கோஹ்லியை கெளரவிக்கும் வகையில் ஒரு அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். 

நேற்று உலகக்கோப்பைக்கான முதல் ஆட்டத்தை தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி சந்தித்த நிலையில், முன்னதாக இந்த புகைப்படத்தை வெளியிட்டது ஐசிசி. 

அதில், கிட்டதட்ட பாகுபலி படத்தில் தேவசேனா கதாப்பாத்திர ஓவியத்தில் அனுஷ்கா எப்படி கம்பீரமாக உட்கார்ந்திருப்பாரோ, அதைபோன்றே இந்த ஓவியப் புகைப்படத்தில் ராஜாவாக சித்தரிக்கப்பட்ட கோஹ்லி கீரிடம் மற்றும் கைகளில் பேட், பந்துடன் சிம்மாசனத்தின் ராஜா உடையில் அமர்ந்திருக்கிறார். 

 

 

இப்படியாக ஐசிசி, விராத்க்கு புகழாரம் சூட்டிய அதே நேரத்தில் அவர் மீது மட்டும் ஐசிசி தனிக்கவனம் செலுத்துவது பாரபட்சமான செயல் என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதையே ஐசிசிக்கு எதிரான ட்விட்டில் பதிவிட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஐசிசி பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிவித்திருந்தார். 

 

 

ஆனால், அதற்கு ஆச்சரியத்தக்க வகையில் புத்திகூர்மையுடன் பதிலளித்த ஐசிசி, விராத் கோஹ்லியின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் வெற்றியைச் சுட்டி காட்டியுள்ளது.

மேலும், ஐசிசியில் அவர் பெற்ற ஹாட்ரிக் அவார்டுகள் குறித்தும், ஐசிசி ரேங்கிங்கில் அவர் முதலிடத்தில் இருப்பதையும் சுட்டிக் காட்டி விமர்சனம் எழுப்பியவர்களின் வாய்களை அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த பதிலடியை விராத் கோஹ்லி ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் ட்ரோல் போட்டு கொண்டாடி வருகின்றனர். 

NEXT STORY