ஹசன் சதம்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றி!

விளையாட்டு
Updated Jun 18, 2019 | 08:37 IST | Times Now

ஒன் டவுனாகக் களமிறங்கிய ஹாகிப் அல் ஹசன் 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இவருக்குதான் மேன் ஆஃப் தி மேட்சும் வழங்கப்பட்டது.

Bangladesh beat West Indies by 7 wickets
Bangladesh beat West Indies by 7 wickets  |  Photo Credit: AP

நேற்று நடைபெற்ற உலகக்கோபையின் 23-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் பங்களாதேஷும் மோதின. இதில் பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தாலும் லீவிஸும் ஷாய் ஹோப்பும் இணைந்து அதிரடியாக ரன்களைக் அடிக்கத் தொடங்கினர். லீவிஸ் 70 ரன்களும் ஹோப் 96 ரன்களும் எடுத்தனர். கெயில் போலவே ரஸலும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனது ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் இருப்பினும் ஹெட்மேயர் 50, ஹோல்டர் 33 என அடித்து 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 321 சேர்த்தனர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். பங்களாதேஷ் வீரர்களால் விக்கெட்டை எடுக்க முடிந்ததே தவிர ரன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன்பிறகு 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. ஒன் டவுனாகக் களமிறங்கிய ஹாகிப் அல் ஹசன் 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இவருக்குதான் மேன் ஆஃப் தி மேட்சும் வழங்கப்பட்டது. அதன்பிறகு வந்த ரஹிம் ஒரு ரன்னில் அவுட் ஆக, லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 94 ரன்கள் எடுத்தது வெற்றியை எளிதாக்கியது. 51 பந்துகள் மீதமிருக்கையில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தைல் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்தும் ஆஃப்கானிஸ்தானும் மோதுகின்றன.

NEXT STORY
ஹசன் சதம்! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றி! Description: ஒன் டவுனாகக் களமிறங்கிய ஹாகிப் அல் ஹசன் 99 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இவருக்குதான் மேன் ஆஃப் தி மேட்சும் வழங்கப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola