உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் ரத்தானது இலங்கை - பாகிஸ்தான் போட்டி!

விளையாட்டு
Updated Jun 07, 2019 | 22:38 IST | Times Now

மழையால் ஆடுகளம் பாதிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Pakistan, Sri Lanka called off due to rain
Pakistan, Sri Lanka called off due to rain  |  Photo Credit: AP

பிரிஸ்டல்: பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கனமழையின் காரணமாக  கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், இலங்கை அணியும் இன்று மோத இருந்தன. இந்த ஆட்டம் பிரிஸ்டல் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே பிரிஸ்டாலில் மழை பெய்யத் துவங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

Pakistan Cricket team

இருப்பினும் சிறிது நேரத்திற்கு பின்னர் மழை நின்று வெயில் அடிக்கத் துவங்கியது. இதையடுத்து போட்டி துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் போடப்படவில்லை. ஆடுகளத்தின் ஒரு சில பகுதிகளில் மழைநீர் அதிகளவு தேங்கியிருந்தது. 

ICC World Cup 2019

பின்னர் ஆடுகளத்தை பரிசோதித்த அம்பயர்கள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர். மேலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், இலங்கை ஆகிய இரு அணிகள் விளையாடிய இரு ஆட்டங்களில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இலங்கை அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலவீனமாக இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அடைந்தது. 
 

NEXT STORY
உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் ரத்தானது இலங்கை - பாகிஸ்தான் போட்டி! Description: மழையால் ஆடுகளம் பாதிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles