உலகக்கோப்பை: நியூஸியின் முதல் தோல்வி, தெறிக்கவிட்ட பாகிஸ்தான்!

விளையாட்டு
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 27, 2019 | 09:05 IST

புள்ளிப் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் இருந்த பாகிஸ்தான், தொடர் வெற்றியால் தற்போது 6வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

Babar Azam
Babar Azam  |  Photo Credit: AP

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பையின் 33-வது போட்டியில் பாகிஸ்தானும் நியூஸிலாந்தும் மோதின. இந்தத் தொடரில் ஒரு முறைகூட தோல்வியடையாத நியூஸிலாந்தைத் தோற்கடித்து பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. அந்த அணியின் பாபர் 101 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்ட நாயகனும் அவரே.

டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் அந்த அணியின் கப்டிலும் முன்ரோவும் களமிறங்கினர். அவர்கள் மட்டுமல்ல அதன்பிறகு களமிறங்கிய சிறப்பான பேட்ஸ்மேன்களான டெய்லரும் லதாமுமே சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் மட்டும் 41 ரன்கள் எடுத்தார். 26 ஓவரிலேயே ஆறு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது நியூஸி. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய நீசன் 97 ரன்களும் காலின் 64 ரன்களும் விளாசினர். இவர்களால் மட்டுமே நேற்று நியூஸியின் ஸ்கோர் 237 ரன்கள் என உயர்ந்தது. 50 ஓவர் முடிவில் நியூஸியின் ஸ்கோர் இதுதான்.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது பாகிஸ்தான். அந்த அணியிலும் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபகார் ஜமானும் இமாம் உல் ஹக்கும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர் என்றாலும் அதன்பிறகு வந்த பாபர் அசாம் 101 ரன்களும் சோஹல் 68 ரன்களும் விளாசியதால் வெற்றி பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தது. 5 பந்துகள் மீதமிருக்க 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தான் இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. புள்ளிப் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் இருந்த பாகிஸ்தான், தொடர் வெற்றியால் தற்போது 6வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. அதுவும் இந்தத் தொடரில் ஒரு முறைகூட தோல்வியடையாத நியூஸிலாந்தைத் தோற்கடித்திருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் மோதுகின்றன.

NEXT STORY
உலகக்கோப்பை: நியூஸியின் முதல் தோல்வி, தெறிக்கவிட்ட பாகிஸ்தான்! Description: புள்ளிப் பட்டியலில் கடைசி நான்கு இடங்களில் இருந்த பாகிஸ்தான், தொடர் வெற்றியால் தற்போது 6வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola