வலுக்கும் உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பங்களாதேஷ் 5-வது இடத்துக்கு முன்னேறியது!

விளையாட்டு
Updated Jun 25, 2019 | 08:18 IST | Times Now

இந்த வெற்றியின் மூலம் 5-வது இடத்தில் இருந்த இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் அந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Bangladesh beat Afghanistan by 62 runs
Bangladesh beat Afghanistan by 62 runs  |  Photo Credit: AP

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை  31-வது போட்டியில் ஆப்கானிஸ்தானும் பங்களாதேஷும் மோதின. இதில் பங்களாதேஷ் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5-வது இடத்தில் இருந்த இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் அந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் பிடித்த பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஃபீல்டிங்குக்கு ஈடு கொடுத்து விளையாடப் போராடியது. தொடக்க வீரர்கள் தாஸ் 16 ரன்களிலும் இக்பால் 36 ரன்களிலும் ஆட்டமிழக்க 50 ஓவர் இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது பங்களாதேஷ். அதிகபட்சமாக முஸிஃபூர் ரஹீம் 83 ரன்கள் அடித்தார். 

263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஆப்கானிஸ்தானின் தொட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் கேப்டன் குல்பதின் 47 ரன்களும் ஷா 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிபட்சமாக சமினுல்லா 49 ரன்கள் எடுத்தார். இதனால் 47 ஓவரிலேயே ஆப்கானிஸ்தான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர் ஷாகிப் ஹஸன் 29 ரன்களைக் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் அவருக்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இன்றையப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. 

NEXT STORY
வலுக்கும் உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பங்களாதேஷ் 5-வது இடத்துக்கு முன்னேறியது! Description: இந்த வெற்றியின் மூலம் 5-வது இடத்தில் இருந்த இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி பங்களாதேஷ் அந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola