உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா மோதல், தனது இடத்தைத் தக்கவைக்குமா?

விளையாட்டு
Updated Jun 27, 2019 | 14:04 IST | Times Now

உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ணிகள் இன்று மோதுகின்றன.

India vs West Indies
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதல்  |  Photo Credit: Twitter

இங்கிலாந்து: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ்அணிகள் மோதுகின்றன. ஓல்ட் டிராஃபோர்ட மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவிருக்கிறது. 

இங்கிலாந்து அணி தொடர் தோல்வியை சந்தித்தாலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகள் வெற்றிப்பெற்று வருவதாலும் உலகக்கோப்பை தொடர் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு பல அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் உடனான இப்போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் முனைப்பில் இப்போட்டியில் களம் இறங்கவுள்ளது இந்திய அணி.

இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் விளையாடிய 5 போட்டிகளில் 9 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 3 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.  நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வேஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த உலகக்கோப்பை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் வெஸ்ட் இண்டீஸுக்கு ஏறத்தாழ முடிவடைந்த நிலையில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.. இரு அணிகளும் உலகக்கோப்பை தொடரில் இதுவரை 8 முறை சந்தித்துள்ள நிலையில் அதில் 5 போட்டிகளில் இந்திய அணியும் 3 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றிபெற்றுள்ளது.  

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 82 பந்துகளில் 101 ரன்கள் அடித்து அசத்தினார் கார்லோஸ் ப்ராத்வெயிட். இன்றைய போட்டியில் அவரின் பங்களிப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகவும் முக்கியமானது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் கலக்கிய போதும், பேட்டிங்கில் சொதப்பியது இந்தியா. நம் மிடில் ஆர்டரின் ஃபார்ம் சற்று கவலைக்குறிய நிலையிலேயே உள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் புவனேஸ்வர் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் பங்குபெறமாட்டார் என்று தெரிகிறது. இன்று இந்தியா வெற்றிபெற்றால், அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஏனென்றால் மற்ற அணிகளுக்கு இன்னும் ஓறிரண்டு போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. 12 புள்ளி எடுத்தால் அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம். இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா 11 புள்ளிகள் எடுத்துவிடும். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று!   

NEXT STORY
உலகக்கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா மோதல், தனது இடத்தைத் தக்கவைக்குமா? Description: உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் ணிகள் இன்று மோதுகின்றன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola