ஸ்டார்க், ஃபின்ச் ருத்ரதாண்டவம் - ஆஸ்திரேலியா 87 ரன்கள் வித்தியாசத்தில் செம வெற்றி!

விளையாட்டு
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 15, 2019 | 23:13 IST

ஆஸ்திரேலியாவின் பௌலர் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ஆரோன் ஃபின்சுக்கு வழங்கப்பட்டது

ICC World Cup 20th match AusVSl
ICC World Cup 20th match AusvSl  |  Photo Credit: AP

இன்று நடைபெற்ற உலகக் கோப்பையின் 20-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இலங்கியும் மோதின. இதில் 87 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதன் மூலம் பாயிண்ட்ஸ் டேபிளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில்  ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் பிடித்த ஆஸ்திரேலியா வீரர்கள் ரன்களை விளாசித்தள்ளினர். அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் சதம் அடித்து 153 ரன்கள் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் அடித்தார். இறுதியில் ஏழு விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கியது இலங்கை.

எப்படியும்  ஜெயிக்க வாய்ப்பில்லை என்றே கிரிக்கேட் ரசிகர்கள் கணித்திருந்தனர். ஆனால் முதலில் ஆடிய கேப்டன் கருணாரத்னேவும் குசல் பெரெராவும் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். கருணாரத்னே 97 ரன்கள் அடித்தார். 32வது ஓவர் வரை இலங்கை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில் கருணாரத்னே மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு 45.5 ஓவரில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியாவின் பௌலர் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ஆரோன் ஃபின்சுக்கு வழங்கப்பட்டது. 

NEXT STORY
ஸ்டார்க், ஃபின்ச் ருத்ரதாண்டவம் - ஆஸ்திரேலியா 87 ரன்கள் வித்தியாசத்தில் செம வெற்றி! Description: ஆஸ்திரேலியாவின் பௌலர் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை  வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ஆரோன் ஃபின்சுக்கு வழங்கப்பட்டது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola