உலகக்கோப்பை 2019: இங்கிலாந்துக்குக் கிளம்பியது கோலி தலைமையிலான இந்திய அணி - வீடியோ

விளையாட்டு
Updated May 30, 2019 | 14:36 IST | Times Now

உலகக்கோப்பை இந்த மாத இறுதியில் நடைபெறும் நிலையில் இந்திய அணி இன்று அதிகாலை இங்கிலாந்துக்குச் கிளம்பிச் சென்றது.

ICC World Cup 2019: with Virat Kohli, Dhoni indian cricket team leave for England - video
ICC World Cup 2019: with Virat Kohli, Dhoni indian cricket team leave for England - video  |  Photo Credit: Twitter

இந்த ஆண்டு 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. வரும் ஜூலை 14-ஆம் தேதிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஐபிஎல் போன்றே லீக் சுற்றில் தகுதி பெற ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் மோத வேண்டும்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இது மூன்றாவது உலகக்கோப்பை. வரும் மே 25-ஆம் தேதி நியூஸிலாந்துடனும் மே 28-ஆம் தேதி பங்களாதேஷுடனும் பயிற்சி ஆட்டங்களில் மோதுகின்றது. இதன்காரணமாக இன்று புதன்கிழமை அதிகாலையில் விராட் கோலை தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்குக் கிளம்பிச்சென்றது. அதன்பிறகு ஜூன் 5-ஆம் தேதி முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது.

 

 

 

 

அனைத்து வீரர்களும் கோட் சூட்டுடன் இந்தியாவைவிட்டுக் கிளம்பினர். விடியற்காலையிலும் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தனர். இந்த ஆண்டு உலகக்கோப்பையில் பங்குபெறும் பத்து அணிகள்: இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆஃப்ரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அஃப்கானிஸ்தான். இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் மோதவிருக்கும் அணி, இடம், தேதியைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள். 

NEXT STORY
உலகக்கோப்பை 2019: இங்கிலாந்துக்குக் கிளம்பியது கோலி தலைமையிலான இந்திய அணி - வீடியோ Description: உலகக்கோப்பை இந்த மாத இறுதியில் நடைபெறும் நிலையில் இந்திய அணி இன்று அதிகாலை இங்கிலாந்துக்குச் கிளம்பிச் சென்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola