NZvAFG: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி!

விளையாட்டு
Updated Jun 09, 2019 | 08:37 IST | Times Now

இதன் வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துள்ளது.

NZvAFG match 13 report
NZvAFG match 13 report  |  Photo Credit: AP

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் 13-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துள்ளது.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி பேட்டிங் பிடித்த ஆப்கானிஸ்தானில் நூர் அலியும் ஹஸ்ரத்துல்லாவும் களமிறங்கினார். இருவரும் முறையே 31, 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். ஹஸ்மத்துல்லா மட்டும் 59 ரன்கள் எடுத்தார்.  மற்ற வீரர்கள் பூஜியம், ஒற்றை இலக்க எண்களிலேயே நடையைக் கட்டினர். இதனால் ஆப்கானிஸ்தான், 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜேம்ஸ் நீசம் 5 விக்கெட்டுகளையும் பெர்குசன் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு களமிறங்க்கிய நியூசிலாந்து அணியில் முதல் பந்தில் கப்டில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் அதன் பிறகு வந்த முன்ரோ 22 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் வில்லியம்சன் 79 ரன்கள் குவித்தும் டெய்லர் 48 ரன்கள் அடித்து வெற்றியை எளிதாக்கினர். இறுதியில் 32 ஓவரிலேயே 3 விக்கெட் மட்டுமே இழந்து நியூசிலாந்து 173 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நீசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் 14-வது போட்டியில் இந்தியாவும்- ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. 

NEXT STORY
NZvAFG: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி! Description: இதன் வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று ஹாட்ரிக் அடித்துள்ளது.
Loading...
Loading...
Loading...