INDvAUS: இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை! யாருக்கு வாய்ப்பு அதிகம்?

விளையாட்டு
Updated Jun 09, 2019 | 09:21 IST | Times Now

இந்தியா போட்டியிட்ட ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா போட்டியிட்ட 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்போடு இன்று ஆஸ்திரேலியா அணி விளையாடும்.

IND vs AUS Match Prediction
IND vs AUS Match Prediction  |  Photo Credit: AP

இன்று உலகக்கோப்பையின் 14-வது போட்டி மாலை 3 மணிக்கு லண்டன் மைதானம் ஓவலில் நடக்கவிருக்கிறது. இன்றைய போட்டியில் நடப்புச் சேம்பியன் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதுகின்றன. 

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவுடன் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா அந்தத்தொடரைக் கைப்பற்றியது. அதுமட்டும் இல்லாமல் ஆஸ்திரேலியா விளையாடிய கடைசி 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்தியா 10-இல் 4-இல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 

இதற்கு முன்னால் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவை 11 முறை சந்தித்திருக்கிறது. அதில் ஆஸ்திரேலியா 8 முறையும் இந்தியா 3 முறையும் வென்றிருக்கிறது. கடந்த உலகக்கோப்பையில் செமி ஃபைனலில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா அதன்பிறகு தற்போது இரண்டு அணியும் உலகக்கோப்பையில் சந்திக்கின்றன. 

மொத்தமாகப் பார்த்தால் 136 முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை ஒரு நாள் போட்டிகளில் மோதி இருக்கின்றன. அதில் 77 முறை ஆஸ்திரேலியாவும், 49 முறை இந்தியாவும் வென்றிருக்கிறது. இந்தியா போட்டியிட்ட ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா போட்டியிட்ட 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்போடு இன்று ஆஸ்திரேலியா அணி விளையாடும். இதற்கு முன்னால் இருக்கும் புள்ளிவிவரங்கள் வைத்துப் பார்க்கும்போது ஆஸ்திரேலியாவுக்குதான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

இருந்தாலும் இந்தியா அணியில் பல இளம் வீரர்களும் மூத்த வீரர்களும் கலந்து பக்கா அணியாகத் திகழ்வதால் இன்றையப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதே பல வல்லுனர்களின் கருத்து. பார்ப்போன் என்று யார் வெற்றிபெறுகிறார்கள் என்று!

NEXT STORY
INDvAUS: இன்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பலப்பரிட்சை! யாருக்கு வாய்ப்பு அதிகம்? Description: இந்தியா போட்டியிட்ட ஒரு போட்டியிலும் ஆஸ்திரேலியா போட்டியிட்ட 2 போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்போடு இன்று ஆஸ்திரேலியா அணி விளையாடும்.
Loading...
Loading...
Loading...