ENGvBAN: சதம் அடித்து அம்பயர் மேல் விழுந்த ஜேசன் ராய்: வெடித்துச் சிரித்த மைதானம்!

விளையாட்டு
Updated Jun 08, 2019 | 21:48 IST | Times Now

அம்பயர் வந்ததை கவனிக்காமல் நிலை தடுமாறி அவர் மேல் வில, ராய்யின் 100 ரன்னைக் கொண்டாட எழுந்த இங்கிலாந்து வீரர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தனர்.

Jason roy century
twitter.com/cricketworldcup  |  Photo Credit: Twitter

இன்று நடைபெற்று வரும் இரண்டு உலகக்கோப்பை போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்தும் பங்களாதேஷும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் ஃபீல்டிஙைத் தேர்வு செய்ய இங்கிலாந்து பேட்டிங் பிடித்தது. அபாரமாக ஆடிய இங்கிலாந்து 386 ரன்கள் குவித்தது. ஜேசர் ராய் சதம் அடித்தார். 

தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி ரன்களை அடித்து நொறுக்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜேசன் ராயும் பேர்ஸ்ரோவ் 50 பந்திகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஜேசன் ராய் 92 பந்துகளில் சதம் அடித்தார். இதுவரை 77 இன்னிங்ஸ்களை மட்டுமே ஆடியிருக்கும் ஜேசன் ராய்க்கு இது ஒரு நாள் போட்டியில் 9-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 121 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து அசத்தினார் ராய்.

 

மேலும் 28 வயதான ஜேசர் ராய் மிக விரையாக 9 சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் தவார் 4-வது இடத்தில் உள்ளார். சதம் அடித்த ஜேசர் ராய் பந்தைப் பார்த்துக்கொண்டே ஓடிவந்ததால் எதிரே அம்பயர் வந்ததை கவனிக்காமல் நிலை தடுமாறி அவர் மேல் வில, ராய்யின் 100 ரன்னைக் கொண்டாட எழுந்த இங்கிலாந்து வீரர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தனர். இதனால் சற்று நேரம் மைதானம் கலகலப்பானது. நல்ல வேளையாக அம்பயர் வில்சனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

NEXT STORY
ENGvBAN: சதம் அடித்து அம்பயர் மேல் விழுந்த ஜேசன் ராய்: வெடித்துச் சிரித்த மைதானம்! Description: அம்பயர் வந்ததை கவனிக்காமல் நிலை தடுமாறி அவர் மேல் வில, ராய்யின் 100 ரன்னைக் கொண்டாட எழுந்த இங்கிலாந்து வீரர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola