உலகக்கோப்பை 2019: வாட் எ மேட்ச்! ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

விளையாட்டு
Updated Jun 07, 2019 | 08:39 IST | Times Now

ஆஸ்திரேலியாவுக்கும் வெஸ்ட் இண்ட்டீஸுக்கும் இடையே நேற்று நடந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

AUSvWI Match report
AUSvWI Match report  |  Photo Credit: AP

நேற்று உலகக்கோப்பையின் 10-வது போட்டி நடப்புச் சேம்பியன் ஆன ஆஸ்திரேலியாவுக்கும் வெஸ்ட் இண்ட்டீஸுக்கும் இடையே நாட்டிங்காமில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் பிடித்தது. தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அபாரமாகப் பந்துவீசியது. முதல் எட்டு ஓவரில் டேவிட் வார்னர், ஃபின்ச், உஸ்மான், மேக்ஸ்வெல் அனைவரும் கேட்ச் கொடுத்து விடைபெற்றனர். நான்காவதாக களமிறங்கிய ஸ்மித் மட்டும்தான் ஆடிக்கொண்டு இருந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 38.  அதன்பிறகு வந்த ஸ்டோனிஸ்ஸும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணியா இப்படி என்று அனைவரும் உச்  கொட்ட யாரும் எதிர்பாராத விதமாக வேகப்பந்து வீச்சாளர் நாதன் கௌல்டர் 60 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அசத்தினார். உலகக்கோப்பையில் 8-வதாகக் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் நாதன். ஸ்டீவ் ஸ்மித்தும் 73 ரன்கள் அடித்திருந்தார். இறுதியில் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 288 ரன்கள் எடுத்திருந்தது. பிராத்வெயிட் 3, ரஸ்ஸல், காட்ரேல், தாமஸ் ஆகியோ தலா 2 என விக்கெட்டுகளைப் பெற்றனர்.

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ். ஆஸ்திரேலிய வீரர்கள்தான் இப்படி அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்கள் என்று பார்த்தால்  வெஸ்ட் இண்டீஸ் இன்னும் மோசம். கிறிஸ் கெயிலும் லீவிஸும் களமிறங்க, லீவிஸ் ஒரு ரன்னில் அவுட். கெயில் 21 ரன்னில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். அதன்பிறகு வந்த ஹோப்பும் பூரனும் சற்று நிதானமாக ஆடி ஸ்கோரை ஏற்றினர்.   பூரன் 21 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ஹிட்மேயர் 21 ரன்களில் அவுட். ஹோப் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இப்படி மிட்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. பேட்ஸ்மேன்கள் மட்டும் என்ன ஸ்டீவ் ஸ்மித், ஃபின்ச், மேக்ஸ்வெல் அனைவரும் கேட்சுகளைப் பிடித்து அதகளம் செய்தனர். 45,46, 47 ஆகிய மூன்று ஓவரில் 3 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் பறிகொடுத்தது ஆஸ்திரேலிய வெற்றியை உறுதி செய்தது. 50 ஓவர்கள் முடித்தாலும் 9 விக்கெட்டுகள் இழந்து வெஸ்ட் இண்டீஸ் 273 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனால் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சின்போது 27 ரன்களை எக்ஸ்டிராவாக கொடுத்திருந்தது. இவற்றைக் கட்டுப்படுத்தி இருந்தாலே வெற்றிபெற வாய்ப்பிருந்திருக்கும் என நெட்சன்கள் புலம்பிக் கொண்டு இருந்தனர்.. ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை உயர்த்திய நாதன் கௌல்டருக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அளிக்கப்பட்டது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன. 
 

NEXT STORY
உலகக்கோப்பை 2019: வாட் எ மேட்ச்! ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! Description: ஆஸ்திரேலியாவுக்கும் வெஸ்ட் இண்ட்டீஸுக்கும் இடையே நேற்று நடந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola