பைனலுக்கு முன்னேறுமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று மோதல்

விளையாட்டு
Updated Jul 09, 2019 | 10:30 IST | Times Now

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி  |  Photo Credit: AP

மான்செஸ்டர்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை இன்று எதிர்கொள்கிறது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 10 அணிகள் இடம்பெற்ற இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டி மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. 

ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணி நல்ல ரன்களை குவிக்கும். நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்த மைதானத்தில்  5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 5 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் தேர்வு செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக முதலில் பேட்டிங் தேர்வு செய்யும்.  இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்தியா 300 ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சில் பும்ரா, புவனேஷ்வர் குமார் அசத்தி வருகின்றனர்.

உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் 4 முறை நியூசிலாந்து அணி வென்றுள்ளது. இந்தியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணி நடப்பு உலகக்கோப்பையின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற்றது. கடைசியில் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது. இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் தோல்வி அடைந்தது.

இதனால் இன்றைய போட்டியில் கடும் சவால்களுக்கு இடையே இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நாளை மறுநாள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடக்க உள்ளது. 

NEXT STORY
பைனலுக்கு முன்னேறுமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று மோதல் Description: உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola