மழையால் தடைபட்ட இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டி இன்றும் தொடரும்!

விளையாட்டு
Updated Jul 10, 2019 | 08:10 IST | Times Now

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியிலும் மழை தொடர்ந்தால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

India - New Zealand Match to resume on reserve day
India - New Zealand Match to resume on reserve day  |  Photo Credit: AP

மான்செஸ்டர்: மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. 

ஆட்டம் துவங்கியது முதலே இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து திணறியது. அந்த அணியின் துவக்க வீரர் மார்டின் குப்டில் 14 பந்துகளை சந்தித்து 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக இருந்தது.

நிக்கோல்ஸ் 28, கேன் வில்லியம்சன் 67,  நீஷம் 12, கிராண்ட்ஹோம் 16 ரன்னில் ஆட்டமிழந்தனர். ராஸ் டெய்லர் அரைசதம் கடந்து களத்தில் நின்றார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது. நீண்ட நேரமாகியும் மழையும் விட்டபாடில்லை. 

இந்நிலையில் இந்த போட்டி தொடர்ந்து இன்று நடைபெறும் என அம்பயர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த போட்டி தொடர்ந்து இன்று நடைபெறும் என அம்பயர்கள் அறிவித்துள்ளனர். ஒருவேளை இன்றும் மழை தொடர்ந்தால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.

NEXT STORY
மழையால் தடைபட்ட இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டி இன்றும் தொடரும்! Description: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியிலும் மழை தொடர்ந்தால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola