ENGvBAN: 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி!

விளையாட்டு
Updated Jun 08, 2019 | 23:50 IST | Times Now

389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் களமிறங்கிய இக்மால் 19 ரன்களிலும் சர்கார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்

EngvBan Match 12
EngvBan Match 12  |  Photo Credit: AP

இன்று நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் 12-வது போட்டியில் இங்கிலாந்தும் பங்களாதேஷும் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் ஃபீல்டிஙைத் தேர்வு செய்ய இங்கிலாந்து பேட்டிங் பிடித்துத் தொடக்கம் முதலே  ரன்களை அடித்து நொறுக்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய பேர்ஸ்ரோவ் 50 பந்திகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஜேசன் ராய் 92 பந்துகளில் சதம் அடித்தார். மொத்தம் 121 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து அசத்தினார் ராய். அதன்பிறகு பட்லர் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இறுதியில் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து 386 ரன்கள் குவித்தது.

389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் களமிறங்கிய இக்மால் 19 ரன்களிலும் சர்கார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் ஆபாரமான ஃபீல்டிங்கில் பங்களாதேஷ் அணி ரன்களை எடுக்கத் திணறது. மூன்றாவதாகக் களமிறங்கிய சாகிப் ஹாசன் மட்டும் சதம் அடித்து 121 ரன்கள் குவித்தார். ஆனால் அவருடன் விளையாடிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பங்களாதேஷ் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்ச்சரும் பென்ஸ்டோக்ஸும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜேசன் ராய் மேன் ஆஃப் தி மேட்ச் பட்டம் வாங்கினார். 

NEXT STORY
ENGvBAN: 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இமாலய வெற்றி! Description: 389 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் களமிறங்கிய இக்மால் 19 ரன்களிலும் சர்கார் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola