மற்ற அணியிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - கோலி யாரைக் கூறினார் தெரியுமா?

விளையாட்டு
Updated May 24, 2019 | 15:00 IST | Times News Network

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மற்ற அணியில் ஒரு வீரரை உங்களது அணியில் எடுக்க வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில்கள்!

ICC World Cup 2019 captains
ICC World Cup 2019 captains  |  Photo Credit: AP

இந்த ஆண்டு 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி உட்பட 10 அணிகளும் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று விட்டன. அங்கே பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் அணிகள், நேற்று ஒன்றாக செய்தியாளர்களுடன் உரையாடினர்.

பங்குபெறும் பத்து அணிகள்: இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆஃப்ரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அஃப்கானிஸ்தான். பங்குபெறும் அணிகளின் வெற்றி தோல்வியைப் பொருத்து ஒவ்வொரு போட்டிக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும். அப்படி இந்த வருடம் ஐசிசி நிர்ணயத்திருக்கும் தொகை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு வித்தியாசமான சுவாரஸ்யமான கேள்வி அனைத்து வீரர்களுக்கும் கேட்கப்பட்டது. அது மற்ற அணியில் ஒரு வீரரை உங்களது அணியில் எடுக்க வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் என்று...

அதற்கு அனைத்து அணி கேப்டன்களும் கூறிய பதில்கள்தான் இவை...

  1. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய காப்டன் அரோன் ஃபின்ச், தென்னாப்பிரிக்காவின் பௌலர் ரபாடா என்றார். 
  2. இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ஆஸ்திரேலியாவின் துணை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கைத் தேர்வு செய்வேன் என்றார்.
  3. இலங்கைக் கேப்டன் டிமுத் கருணாகரத்னே இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் வேண்டும் என்றார்.
  4. பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் கான் இங்கிலாந்து அணியின் பட்லர் வேண்டும் என்றார்.
  5. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் எங்கள் அணியே சிறப்பாக இருக்கிறது, அதனால் மற்ற அணி வீரர்கள் தேவையில்லை என்றார்.
  6. ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதின் நாயிஃப் அன்றைய தினத்தைப் பொருத்துதான் முடிவு செய்யமுடியும் என்று வித்தியாசமான பதிலைக் கூறினார்.
  7. தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்ளஸில் கூறுகையில் பௌலர்களின் ரஷித் கான் அல்லது பும்ரா, பேட்ஸ்மென் என்றால் கோலி என்றார்
  8. பங்களாதேஷ்  கேப்டன் மார்ட்டசாவும் கோலியைதான் கைக்காட்டினார்.
  9. இந்திய அணிக் கேப்டன்  விராட் கோலி தென்னாப்பிரிக்க கேப்டன் டூப்ளஸிஸ் வேண்டும் என்றார்.

வரும் ஜூன் 5-ஆம் தேதி இந்தியா தனது முதல் போட்டியை தென்னாப்பிரிக்காவுடன் சந்திக்கிறது. இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் மோதவிருக்கும் அணி, இடம், தேதியைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள். 

NEXT STORY
மற்ற அணியிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - கோலி யாரைக் கூறினார் தெரியுமா? Description: நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மற்ற அணியில் ஒரு வீரரை உங்களது அணியில் எடுக்க வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் எனக் கேட்டதற்கு அவர்கள் அளித்த பதில்கள்!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola