பாலிதான் முத்திரையை தோனி நீக்கத் தேவையில்லை - தோனிக்குத் துணை நிற்கும் பிசிசிஐ

விளையாட்டு
Updated Jun 07, 2019 | 13:45 IST | Times Now

தோனி அணிந்திருக்கும் முத்திரை என்ன? தோனி ஏன் அதனை அணிந்து இருக்கிறார்? ஐசிசி ஏன் அதனை நீக்கச் சொல்லுகிறது?

Balidaan Badge Dhoni
Balidaan Badge Dhoni  |  Photo Credit: Twitter

உலகக்கோப்பை போட்டியில் மகேந்திர சிங் தோனி நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தியத் துணை ராணுவத்தின் சிறப்புப் படையின் பாலிதான் முத்திரையைக் கையுறையில் போட்டிருந்தார். இந்தப் போட்டி கடந்த புதன்கிழமை நடைபெற்றது, அன்றைய தினம் நேட்டிசன்கள் இதனை கவனித்து தோனியின் நாட்டுப்பற்றைப் பாருங்கள் என புகழ்ந்து தள்ளினர். 

இந்நிலையில் இந்த முத்திரையை உபயோகிக்ககூடாது அதனை நீக்கச் சொல்லுங்க என சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி, இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு வலியுறுத்தி உள்ளது. ஐசிசி விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்ட எந்த விதமான குறியீடுகளும் இருக்கக்கூடாது என்ற விதியின் அடிப்படையில் இதனை வலியுறுத்துவதாக ஐசிசி கூறியுள்ளது. அதனை எதிர்த்து தோனியின் கிரிக்கெட் ரசிகர்கள்   தோனிக்கு ஆதரவாக #DhoniKeepTheGlove என்றெ ஹேஸ்டேகில் ட்வீட்டுகளைப் பதிந்து வருகிறார்கள். 
 

 

 

தோனியும் முத்திரையும்: 

தோனி இந்த முத்திரையைப் பயன்படுத்துவது இது முதல் முறை அல்ல. அவரது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களைப் பார்த்தாலே இது தெரியும். அவரது ஃபோன் கவர், தொப்பிகள் அனைத்திலும் தோனி இந்த முத்திரையைப் பதித்து பயன்படுத்தி வருகிறார். அவருக்கு 2011-ஆம் ஆண்டு இந்தியத் துணை ராணுவம், தோனியை கவுரவப் படுத்தும் வகையில் அவருக்கு கவுரவ லெப்டினண்ட் கலோனல் பதவியை வழங்கியது. 

Para Commandos.jpg

அதன்பிறகு தோனி 2015-ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்தில் பாரா ப்ரிகேட் என்று கூறப்படும் படையில் பாராசூட் பயிற்சியை மேற்கொண்டார். இந்த பாராசூட் சிறப்புப் படையைக் குறிக்கும் முத்திரைதான் இந்த பாலிதான். இதனால் தோனி இந்த முத்திரையைப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், அவரது குழந்தை ஸிவாவுக்கும் பாரா எழுத்து பதிந்த உடை அணிந்து அழகு பார்த்தார்.  இருப்பினும் சர்வதே கிரிக்கெட்டுக்கு என்று ஒரு விதி இருக்கிறது என்று ஐசிசி கூறியிருப்பதால், தோனி என்ன சொல்லப் போகிறார் என்று காத்திருந்த கிரிக்கெட் உலகத்தில் தோனிக்கு பதிலாக பிசிசிஐ கருத்துச் சொல்லி இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐ  நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய், தோனி எந்த ஐசிசி விதிமுறையும் மீறவில்லை. இந்த முத்திரை வர்த்தக ரீதியான, மதம், அரசியல் சம்பந்தமான முத்திரை இல்லை. இதனால் தோனி அதனை நீக்கத் தேவையில்லை.  இதனை நிர்வாகத்தலைவர் ராகுல் ஜோரி ஐசிசியிடம் விளக்கி அனுமதி வாங்குவார் என்று தெரிவித்துள்ளார். 

 

 

NEXT STORY