உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி, நியூஸிலாந்து அணி அபாரம்!

விளையாட்டு
Updated May 26, 2019 | 09:45 IST | Times Now

நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா நியூஸிலாந்திடன் தோல்வி அடைந்தது.

ICC cricket world cup 2019:  India vs New Zealand Warm-up match report
ICC cricket world cup 2019: India vs New Zealand Warm-up match report  |  Photo Credit: AP

இந்த ஆண்டு 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் 30-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 10 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது அவர்களுக்கு பயிற்சி ஆட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. நேற்று இந்தியாவும் நியூஸிலாந்தும் மோதின.

இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நியூஸிலாந்து அணி அதிரடியாக பௌலிங் போடத்துவங்கியது. ரோகித், தவான் இருவருமே இரண்டு ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் 6 ரன்னில் அவுட்டானார். கோலி 18, பாண்டிய 30, தோனி 17, தினேஷ் கார்த்தின் 4 என அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 115 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, இறுதில் 39.2 ஓவரில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய நியூஸிலாந்து அணி 77 பந்துகள் மீதம்வைத்து நான்கு விக்கெட் இழப்புக்கு 37.1 ஓவரிலேயே 181 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிகபட்சமாக அவர்கள் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் (நம்ம சன் ரைஸர்ஸ் கேப்டன் தான்) 67 ரன்களும் ராஸ் டெய்லர் 71 ரன்களும் அடித்தனர். போட்டி முடிந்து பேசிய ஜடெஜா இது பயிற்சி ஆட்டம்தான். தோல்வி குறித்துக் கவலைக் கொள்ள வேண்டாம். இங்கிலாந்து பிட்ச்சில் ஆடுவது சிரமம். அதற்கு பயிற்சி எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

உலகக்கோப்பையில் பங்குபெறும் பத்து அணிகள்: இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆஃப்ரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, அஃப்கானிஸ்தான். இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் மோதவிருக்கும் அணி, இடம், தேதியைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள். 

NEXT STORY
உலகக்கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி, நியூஸிலாந்து அணி அபாரம்! Description: நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா நியூஸிலாந்திடன் தோல்வி அடைந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola