விபத்தில் சிக்கிய தமிழ் ரசிகரின் மருத்துவ செலவை ஏற்ற ஹர்திக் பாண்டியா

விளையாட்டு
Updated Sep 26, 2019 | 20:44 IST | Times Now

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி-20 போட்டியை காண தரம்சாலா வரை பைக்கில் சென்ற ஹர்திக் பாண்டியாவின் ரசிகர் விபத்துக்குள்ளானார். அந்த தகவலை அறிந்த ஹர்திக் பாண்டியா அவரின் மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார்.

விபத்துக்குள்ளாகிய தன் ரசிகருக்கு உதவினார் ஹர்திக் பாண்டியா, Hardik Pandya helps his loyal fan who met with a serious accident
விபத்துக்குள்ளாகிய தன் ரசிகருக்கு உதவினார் ஹர்திக் பாண்டியா   |  Photo Credit: Twitter

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா விபத்துக்குள்ளாகிய தன் ரசிகரின் மருத்துவ செலவுகளை ஏற்று உரிய நேரத்தில் உதவினார். 

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு பல தீவிர ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சச்சினின் ரசிகர் சுதிர் குமார் சௌதரி  உடம்பில் பெயிண்ட் அடித்துக்கொண்டு சச்சின் விளையாடும் போட்டிகளுக்கு தவறாமல் வருவார். அதே போல் தோனிக்கு சரவணன் என்னும் ஒரு தீவிர ரசிகர் உள்ளார். அவரும் உடம்பில் பெயிண்ட் அடித்துக்கொண்டு தலையில் சுருட்ட முடியுடன் போட்டியை காண வருவார். அந்த வகையில் தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கும் முகுந்தன் என்னும் தீவிர ரசிகர் உள்ளார். கோவையை சேர்ந்த இவர் 16 மொழிகளில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை உடம்பில் பச்சை குத்தியுள்ளார். மேலும், அவரும் ஹர்திக் பாண்டியா விளையாடும் போட்டிகளை நேரில் சென்று பார்த்து வருகிறார். ஹர்திக் பாண்டியாவை பல முறை நேரில் சந்தித்து புகைப்படங்களும் எடுத்துள்ளார்.      

இந்நிலையில் இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி-20 போட்டியை காண கோயம்பத்தூரில் இருந்து தரம்சாலா வரை நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார் முகுந்தன். அப்போது ஜபல்பூர் அருகே அவருக்கு எதிர்பாரதவிதமாக விபத்து ஏற்பட்டது. உடனே அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் முகுந்தனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ஹர்திக் பாண்டியா அவரின் மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார். மேலும் போட்டிகளை காண இது போல பைக்கில் பயணம் செய்யவேண்டாம் என்றும் முகுந்தனுக்கு அறிவுறுத்தியுள்ளார். சிகிச்சை முடிந்து தற்போது முகுந்தன் கோவையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

Mugunthan

Mugunthan

கடந்த ஜனவரி மாதம் ஹர்திக் பாண்டியா நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை பற்றி இழிவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு போட்டிகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டது. அப்போது ஹர்திக்கின் ரசிகர் முகுந்தன் அவர் விரைவில் அணிக்கு  திரும்பி வர வேண்டும் என்று வேண்டி மொட்டை அடித்து கொண்டார்.        

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...