[வீடியோ] அறுவை சிகிச்சைக்குப் பின் நடை பழகும் ஹர்திக் பாண்டியா

விளையாட்டு
Updated Oct 09, 2019 | 14:02 IST | Times Now

லண்டனில் வெள்ளிக்கிழமை ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அவர் நடை பயின்று வருகிறார்.

Hardik Pandya Baby Steps, நடை பயிலும் ஹர்திக் பாண்டியா
நடை பழகும் ஹர்திக் பாண்டியா  |  Photo Credit: Twitter

சென்னை: முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து நடை பழகும் வீடியோ ஒன்றை ஹர்திக் பாண்டியா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மழலை போல அடிகள் எடுத்து வைப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள பாண்டியா, முழுமையாக குணமடையும் பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், தமக்கு ஆதரவு மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

முன்னதாக, லண்டன் நகரில் ஹர்திக் பாண்டியாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கடந்த சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்தியது. தமது மருத்துவருடன் அக்டோபர் 2-ஆம் தேதி லண்டன் சென்ற ஹர்திக் பாண்டியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக டி20 போட்டியை தொடர்ந்து தமக்கு முதுகு வலி இருப்பதாக ஹர்திக் பாண்டியா கூறியதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள முதுகுத்தண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றது பிசிசிஐ மருத்துவக் குழு. அறுவை சிகிச்சை செய்வது தான் நீண்ட கால தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில், ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை மேற்கொண்டு உடல்நலம் தேறி வருகிறார்.

 

 

தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. மேலும், நவம்பர் 3-ல் தொடங்கும் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலும் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார். 25 வயதாகும் ஹர்திக் பாண்டியா சர்வதேச கிரிக்கெட்டில் 11 டெஸ்ட், 54 ஒருநாள் போட்டிகள் மற்ரும் 40 டி20 போட்டிகளில் களம் கண்டுள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...