ஐசிசி இன்டர்நேஷனல் பேனலின் முதல் பெண் ரெஃப்ரி-இந்தியாவின் ‘ஜி.எஸ்.லெட்சுமி’ நியமனம்!

விளையாட்டு
Updated May 14, 2019 | 19:27 IST | Times Now

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வாகியிருக்கிறார் லெட்சுமி. இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமிக்கு வயது 51.

cricket, கிரிக்கெட்
ஜி.எஸ்.லெட்சுமி   |  Photo Credit: Twitter

டெல்லி: இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமி சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வாகியிருக்கிறார் லெட்சுமி. இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமிக்கு வயது 51. 2008-2009 ஆம் ஆண்டு உள்நாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளில் மேற்பார்வையாளராக இருந்துள்ளார் லெட்சுமி.

 

 

இதுகுறித்து பேசிய லெட்சுமி, “ஐ.சி.சி குழுவில் என்னை ரெஃப்ரியாக தேர்ந்தெடுத்துள்ளது மிகப்பெரிய கெளரவமாக நினைக்கிறேன். நான் கிரிக்கெட் வீரராக  இருந்துள்ளேன். மேட்ச் ரெஃப்ரியாகவும் பணியாற்றியுள்ளேன். இந்த அனுபவங்கள் சர்வதேச அரங்கில் எனக்கு உதவும் என்று நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார். 

NEXT STORY
ஐசிசி இன்டர்நேஷனல் பேனலின் முதல் பெண் ரெஃப்ரி-இந்தியாவின் ‘ஜி.எஸ்.லெட்சுமி’ நியமனம்! Description: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வாகியிருக்கிறார் லெட்சுமி. இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமிக்கு வயது 51.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles