கேப்டனாக இன்னும் கோலி நீண்ட தூரம் செல்ல வேண்டும் - கெளதம் கம்பீர் பேட்டி

விளையாட்டு
Updated Sep 20, 2019 | 17:45 IST | Times Now

சர்வதேச அளவில் கோலி கேப்டனாக சிறப்பாக செயல்படுவதற்கு ரோஹித் ஷ்ரமா, தோனி போன்ற பெரிய வீரர்கள் இருப்பதே காரணம் என்று கூறி கோலியின் தலைமையை கெளதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.   

கோலியின் கேப்டன்ஷிப்பை விமர்சித்தார் கெளதம் கம்பீர், Gautam Gambhir takes a dig on Virat Kohli’s captaincy
கோலியின் கேப்டன்ஷிப்பை விமர்சித்தார் கெளதம் கம்பீர்  |  Photo Credit: Twitter

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கெளதம் கம்பீர் விராட் கோலியின் கேப்டன் ஷிப் குறித்து விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

சர்வதேச அளவில் தற்போது மிக சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராக விராட் கோலி திகழ்கிறார். அண்மையில் டெஸ்டில் அதிக வெற்றிகளை பதித்த இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்தார். கிரிக்கெட்டில் அவரின் சாதனைகளுக்காக டெல்லி பெரோஷா கோட்லா மைதானதின் ஒரு ஸ்டாண்டுக்கு அவரின் பெயரை  சூட்டி கௌரவப்படுத்தினர். 

இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர், பிரபல கல்லூரியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் மாணவர்களுடன் உரையாடும் போது கோலியின் தலைமை பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் " கோலி செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. கடந்த உலகக்கோப்பை தொடரில் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டார். சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக கேப்டன்ஸி செய்வது ரோஹித் ஷர்மா இருப்பதால் தான். மேலும் தோனியும் அவருடன் அதிகம் இருந்துள்ளார். ஒரு வீரரின் கேப்டன்ஷிப்பை பெரிய வீரர்கள் இல்லாத அணியை அவர் தலைமை தாங்கும்போது தான் கணிக்க முடியும். அந்த வகையில் ரோஹித் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதனை கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் ஒப்பிட்டு பாருங்கள்" என்று கூறி கோலியின் தலைமையை அவர் விமர்சித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மழையால் கைவிடப்பட்ட ஒரே ஒரு போட்டியை தவிர அனைத்து போட்டிகளிலும் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.     

NEXT STORY