உலகக்கோப்பையில் இந்தியாவின் முதல் வெற்றி! - சச்சின் முதல் அமித்ஷா வரை வெற்றியைக் பாராட்டிய பிரபலங்கள்

விளையாட்டு
Updated Jun 06, 2019 | 08:58 IST | Times Now

உலகக்கோப்பைத் தொடரில் நேற்று தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. இதனால் நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

here's how everyone congratulated Team India for its win against South Africa in Southampton.
here's how everyone congratulated Team India for its win against South Africa in Southampton.  |  Photo Credit: AP

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடரில் நேற்று, தென் ஆப்ரிக்க அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபட்டது இந்திய அணி. முதல் போட்டியிலேயே இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிபெற்றது. ஹிட் மேன் ரோஹித் சதம் அடித்து சாதனை படைத்தார். இறுதியில் வரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் அடித்தார் ரோஹித் சர்மா. பும்ரா, சாஹலிம் அபாரப் பந்துவீச்சால்ல் தென்னாப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டுகள் பந்தாடப்பட்டன. தோனி 17 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்தார். ஒருநாள் போட்டியில் இவ்வளவு ரன்களைக் கடக்கும் 2-வது விக்கெட் கீப்பர் இவரே. இதனால் நாடு முழுவதிலும் இருந்து இந்திய அணிக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன், சேவாக் போன்ற மூத்த வீரர்களும் அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களும் தங்களது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY