இன்று 47-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் 'தாதா' கங்குலி !

விளையாட்டு
Updated Jul 08, 2019 | 12:17 IST | Times Now

ரசிகர்களால் 'தாதா' என்று அழைக்கப்படும் சௌரவ் கங்குலி இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Sourav Ganguly
சௌரவ் கங்குலி  |  Photo Credit: Twitter

உலக கிரிக்கெட் வரலாற்றில் தன் சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல்  இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சௌரவ் கங்குலி தனது 47-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களால் 'தாதா', 'பெங்கால் டைகர்', 'காட் ஆஃப் ஆஃப்சைடு' என்று அழைக்கப்படும் சௌரவ் கங்குலி ஜூலை 8, 1972-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். சிறு வயதில் கால்பந்தில் அதிகம் நாட்டம் கொண்ட சௌரவ் கங்குலி, பின்னாளில் கிரிக்கெட்டில் ஈடுபாடு காட்ட தொடங்கினார். 

ரஞ்சி ட்ரோபி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கங்குலி, 1992-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். பின்பு 1996-இல் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரரானார் கங்குலி.  

இந்திய கிரிக்கெட் அணி சர்ச்சைகளாலும் தோல்விகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. சச்சின் கேப்டன் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து  2000-ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் சௌரவ் கங்குலி. அவர் கேப்டனாக இருந்த காலத்தில் தான் இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது என்றே சொல்லலாம். 2003 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது. ஆனால் ஆஸ்திரேலியா அணியை அப்போட்டியில் வெற்றிபெற முடியவில்லை. பல இளம் வீரர்களான தோனி, யுவராஜ் சிங் அவர் காலத்தில் தான் அறிமுகமானார்கள். அவர்களின் எதிர்காலத்தை கட்டமைத்ததில் கங்குலிக்கு பெரும் பங்கு உண்டு.

சௌரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கை புகழாரங்கள் சறுக்கல்கள் என்று கலந்தே இருந்தது. அவரின் சொதப்பலான ஆட்டத்தினால் 2005-ஆம் ஆண்டு அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு கடும் முயற்சியால் 2007-ஆம் ஆண்டு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.113 டெஸ்ட் போட்டிகளிலும் 311 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள கங்குலி 2008-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்று 11 ஆண்டுகள் ஆகியபோதும் இன்றும் அவர் புகழ் ஓயவில்லை.

 

NEXT STORY
இன்று 47-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் 'தாதா' கங்குலி ! Description: ரசிகர்களால் 'தாதா' என்று அழைக்கப்படும் சௌரவ் கங்குலி இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola