3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் F1 கார் பந்தய வீரர் நிக்கி லவுடா காலமானாா்

விளையாட்டு
Updated May 21, 2019 | 09:48 IST | Times Now

ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 1975, 1977 மற்றும் 1984 -ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா காலமானார்.

Former F1 champion Niki Lauda
Former F1 champion Niki Lauda  |  Photo Credit: ANI

வியன்னா: ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் வீரர் நிக்கி லவுடா உடல்நலக்குறைவால் காலமானாா். அவருக்கு வயது 70.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஃபார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் வீரர் நிக்கி லவுடா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 70.

ஃபார்முலா ஒன் காா் பந்தயத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் நிக்கி லவுடா. 1976, ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஜெர்மனியில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் கலந்துகொண்ட போது நிக்கி லவுடாவின் ஃபெரரி கார் தீப்பிடித்தது. இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. எழும்பு முறிவு உட்பட உடலில் பல்வேறு விதமான காயங்கள் ஏற்பட்டன. 

சிகிச்சைக்கு பின்னர் மெதுவாக மீண்டு வந்த நிக்கி, 1977, 1984 -ம் ஆண்டுகளில் நடந்த ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் பங்கேற்று ஆஸ்திரியாவுக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.அதன் பின்னர் 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிக்கி தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று காலமானாா். இத் தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

நிக்கி லவுடா ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 1975, 1977 மற்றும் 1984 -ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

NEXT STORY
3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முன்னாள் F1 கார் பந்தய வீரர் நிக்கி லவுடா காலமானாா் Description: ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தில் 1975, 1977 மற்றும் 1984 -ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற நிக்கி லவுடா காலமானார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola