IPL 2019: தொடங்கும் ப்ளே-ஆஃப், சென்னைக்கு எத்தனை வாய்ப்பு? அனைத்து போட்டிகளின் நேரம், இடம் அனைத்தும் இங்கே!

விளையாட்டு
Updated May 06, 2019 | 15:07 IST | விபீஷிகா

ஐபிஎல் 2019, நேற்றோடு தகுதிப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளைமுதல் ப்ளே-ஆஃப் போட்டிகள் தொடங்குகின்றன. எங்கே, யாருடன் இந்த அணி மோதுகிறது, யாருக்கு எத்தனை வாய்ப்புகள் என மொத்த தகவலும் இங்கே!

ipl play-off
ஐபிஎல் ப்ளே-ஆஃப்  |  Photo Credit: Twitter

44 நாட்கள், 56 போட்டிகள், எட்டு அணிகள்... அனைத்தும் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப்க்கு செல்வதற்காக தகுதி போட்டிகள் நேற்று மாலையுடன் நிறைவுற்றது. ஐபிஎல் போட்டிகளும் உலகக்கோப்பை போலதான். ஒரு அணியும் வெற்றி தோல்வி அது வென்றாலும் தோற்றாலும் மாறுவது மட்டுமின்றி மற்ற அணியின் வெற்றி தோல்வியையும் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

அப்படி நேற்று நடந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி மும்பையிடம் தோற்க, அடித்தது ஹைதராபாத்துக்கு அதிர்ஷ்டம். ஆம் அதிர்ஷ்டம்தான், நான்காவது அணியாக ப்ளே-ஆஃப்க்கு உள்ளே நுழைந்த ஹைதராத்துக்கும் பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசியாக உள்ள பெங்களூரு அணிக்கும் ஒரு புள்ளிதான் வித்தியாசம். 14 புள்ளிகள் பெற்றால்தான் ப்ளே-ஆஃப் செல்ல முடியும் என்ற விதிமுறையை இந்த வருட ஐபிஎல் மாற்றி அமைத்திருக்கிறது. அப்படி வெறும் 12 புள்ளிகளுடன் ப்ளே-ஆஃப் சென்ற முதல் அணி ஹைதராபாத் தான்!

 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே மூன்று முறை டைட்டிலை வென்ற மும்பையும் சென்னையும் ப்ளே-ஆஃப்க்கு தகுதி பெற, அதே 18 புள்ளிகள் பெற்று மூன்றாவது அணியாக டெல்லி உள்ளே நுழைந்திருந்தது. டெல்லி அணி 2012-க்குப் பிறகு நுழையும் முதல் ப்ளே-ஆஃப் இது, எல்லாம் கங்குலியின் உபயம்தான். சரி, எங்கே ப்ளே-ஆஃப் சுற்றுகள் நடக்கிறது?

மே 7 -ஆம் தேதி - குவாலிஃபையர் 1:  இடம்:  சென்னை,  நேரம்: இரவு 7.30,

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதுகின்றன.

இதில் வெற்றிபெறும் அணி நேராக ஃபைனல்ஸ் சென்றுவிடும். தோல்வியுற்ற அணி மற்றொரு வாய்ப்பாக குவாலிஃபையர் 2-இல் போட்டியிடும். 

மே 8 -ஆம் தேதி - எலிமினேட்டர்:  இடம்: விசாகப்பட்டினம், நேரம்: இரவு 7.30, 

சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதுகின்றன.

இதில் வெற்றி பெற்ற அணி குவாலிஃபையர் 2- இலும் ஜெயிக்க வேண்டும்.தோற்ற அணி வெளியேற வேண்டியதுதான்.

மே 10 -ஆம் தேதி - குவாலிஃபையர் 2:  இடம்: விசாகப்பட்டினம், நேரம்: இரவு 7.30,

குவாலிஃபையர் 1-இல் தோல்வி அடைந்த  அணியும் எலிமினேட்டரில் வெற்றிபெற்ற அணியும் மோதும். 

மே 12- ஆம் தேதி - ஐபிஎல் 2019 ஃபைனல்:

இடம்: ஹைதராபாத் குவாலிஃபையர் 1 மற்றும் 2 -இல் வெற்றி பெற்ற அணிகள் மோதும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் பொருத்தவரை, நாளை நடைபெறும் குவாலிஃபையரில் ஜெயித்தால் நேராக ஃபைனலிலும் தோற்றால் மற்றொரு வாய்ப்பாக குவாலிஃபையர் 2-இல் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு அதிக எதிர்பார்போடு நடக்கும் போட்டி என்றால் அது மும்மைக்கும் சென்னைக்கும் நடக்கும் போட்டிதான். இரண்டு அணி ரசிகர்களும் மோதிக்கொள்ளும் போட்டி இது. இதுவரை 28 முறை இரு அணிகளும் மோதி அதில் 16 முறை மும்பையும் 12 முறை சென்னையும் வெற்றி பெற்று இருக்கின்றன. அதனால் நாளை நடைபெறும் போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

 


 

NEXT STORY
IPL 2019: தொடங்கும் ப்ளே-ஆஃப், சென்னைக்கு எத்தனை வாய்ப்பு? அனைத்து போட்டிகளின் நேரம், இடம் அனைத்தும் இங்கே! Description: ஐபிஎல் 2019, நேற்றோடு தகுதிப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் நாளைமுதல் ப்ளே-ஆஃப் போட்டிகள் தொடங்குகின்றன. எங்கே, யாருடன் இந்த அணி மோதுகிறது, யாருக்கு எத்தனை வாய்ப்புகள் என மொத்த தகவலும் இங்கே!
Loading...
Loading...
Loading...