'சின்ன தல...கலக்கல் கர்ன்...ஓடினேன்..ஓடினேன்’ - வித்தியாசமாக தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொன்ன சிஎஸ்கே டீம்!

விளையாட்டு
Updated Apr 14, 2019 | 14:53 IST | Times Now

கொஞ்சும் தமிழில் ‘தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்’ சொல்வது வேற ஐபிஎல் சீசனில் ரசிகர்களுக்கு கிடைத்த நியூ இயர் எக்ஸ்ட்ரா ட்ரீட். 

IPL 2019, ஐபிஎல் 2019
சிஎஸ்கே டீம்  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று சித்திரைத் திருநாள் என்னும் தமிழர் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குண்டுகுண்டான கையெழுத்துகளில் தமிழ் வார்த்தைகளை எழுதி, மழலைத் தமிழில் வாழ்த்து கூறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் இளவேனிலை வரவேற்கும் சித்திரை புத்தாண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை சிறப்பிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் எனப்படும் சிஎஸ்கே அணியினர் தங்களுடைய பெயர்களை அழகழகாக தமிழில் எழுதியதுடன், ‘தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்பதை தமிழிழும் தெரிவித்துள்ளனர். 

CSK wishes

இந்த வீடியோவில், வாட்சன் தனது பெயரை ‘வாட்டோ’ என்று செல்லமாக எழுதியிருக்கிறார்.  ரெய்னாவோ ‘சின்ன தல’ என்று எழுதி கலகலக்கவைக்கிறார். இம்ரானோ எப்போதுமே ஓடிக்கொண்டே இருக்கும் தன்னை ‘ஓடினேன் ஓடினேன்’ என்று எழுதி கலாய்க்கிறார். செர்ரி, ராஜ்புத், ஷார்தூள், மோஹிட், கலக்கல் கர்ன், சான்டா என நீளும் இந்த தமிழ் ரைட்டிங் வீடியோவில் தாங்கள் எழுதியதை அவரவர்களே படித்துக் காட்டுவதும் செம மாஸ்.

கூடவே வரிசையாக அனைவரும் கொஞ்சும் தமிழில் ‘தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்’ சொல்வது வேறு ஐபிஎல் சீசனில் அடுக்கடுக்காக வெற்றியைக் குவித்து வரும் சிஎஸ்கே டீம் ரசிகர்களுக்கு கொடுத்த நியூ இயர் எக்ஸ்ட்ரா ட்ரீட்.

எல்லா மொழியினரும், நாட்டினரும் கலந்து இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணியில் சிஎஸ்கே தமிழகத்தின் செல்லப்பிள்ளையாகவே மாறிவிட்டது. அதை பறைசாற்றும் வகையில் ஹர்பஜன் சிங் எப்போதும் தமிழ் ட்வீட்டுகளாக ட்விட்டரில் போட்டு தாக்கி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றால், சிஎஸ்கே அணியினரின் இந்த புது முயற்சியும் கிரிக்கெட் முக்கியமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு நிஜமான தமிழ்ப்புத்தாண்டு கிப்ட்தான்!

NEXT STORY
'சின்ன தல...கலக்கல் கர்ன்...ஓடினேன்..ஓடினேன்’ - வித்தியாசமாக தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொன்ன சிஎஸ்கே டீம்! Description: கொஞ்சும் தமிழில் ‘தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்’ சொல்வது வேற ஐபிஎல் சீசனில் ரசிகர்களுக்கு கிடைத்த நியூ இயர் எக்ஸ்ட்ரா ட்ரீட். 
Loading...
Loading...
Loading...