’மொறுமொறு’ வட்ட தோசை சுட்டு பழகிய சிஎஸ்கே டீமின் ‘சூப்பர் தோசை சேலன்ஞ்ச்’!

விளையாட்டு
Updated Apr 15, 2019 | 17:40 IST | Times Now

’சூப்பர் தோசா சேலன்ஞ்ச்’ என்று பெயரிடப்பட்ட இந்த போட்டியில் யார் சூப்பர் மொறுமொறு தோசையை சுடுவது என்பதுதான் டாஸ்க்.

IPL 2019, ஐபிஎல் 2019
தோசை சுட்ட சிஎஸ்கே டீம்  |  Photo Credit: Getty Images

சென்னை: ஐபிஎல் போட்டிகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களது திறமையை கிரிக்கெட் களத்தில் மட்டுமின்றி வேறுவேறு களங்களிலும் காமித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்கள்.

ஐபிஎல் லீக் போட்டிகளுக்கு நடுவே சிஎஸ்கே அணி அடிக்கும் லூட்டிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ‘யெல்லோவ்’ மற்றும் ‘விஸ்டில்போடு’ என்ற ஹேஷ் டேக்குகளில் இவற்றை சிஎஸ்கே ரசிர்கள் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர். 

தமிழ்ப்புத்தாண்டு நாளை முன்னிட்டு நேற்று தமிழில் எழுதி, தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்லி லூட்டியடித்த சிஎஸ்கே அணியினர் இன்று கையில் எடுத்திருக்கும் ஐடியா, ‘தோசை சுடுவது’.

’சூப்பர் தோசா சேலன்ஞ்ச்’ என்று பெயரிடப்பட்ட இந்த போட்டியில் யார் சூப்பர் மொறுமொறு தோசையை சுடுவது என்பதுதான் டாஸ்க்.

மூன்று வகை சட்னி முதலில் ரெடி. யூடியுபில் தோசை சுடுவதை பார்த்து நம்ம வீரர்களும் ரெடி. பயிற்சியிலேயே பாதி கிழிந்த தோசை, கொத்துபரோட்டா தோசை, நடுவில் மட்டும் கேப் உள்ள தோசை என்று அவர்கள் சுட்ட தோசையைப் பார்த்து அவர்களே பரிதாபகரமாக சிரிக்கும் நிலைமை. பேக்கிரவுண்ட் மியூசிக் வேறு தோசை மேக்கிங்கோடு அட்டகாச காம்போ. 

ஆனால், ரியல் தோசை சேலன்ஞ் ஆரம்பித்தவுடன் ‘சூப்பர் தோசை’ போட்டு அசத்திவிட்டனர் வீரர்கள். ரெய்னா, சாண்ட்னர், தாஹிர் என அனைவர் சுட்ட தோசையும் எண்ணெயில் வெந்த வாவ்...ஆஹா...ஓஹோ..சூப்பர் ரவுண்ட் தோசைகளாக வந்ததற்கு காரணம் சிஎஸ்கே வீரர்களின் டெடிகேஷன் தான்!

NEXT STORY
’மொறுமொறு’ வட்ட தோசை சுட்டு பழகிய சிஎஸ்கே டீமின் ‘சூப்பர் தோசை சேலன்ஞ்ச்’! Description: ’சூப்பர் தோசா சேலன்ஞ்ச்’ என்று பெயரிடப்பட்ட இந்த போட்டியில் யார் சூப்பர் மொறுமொறு தோசையை சுடுவது என்பதுதான் டாஸ்க்.
Loading...
Loading...
Loading...