நம்ம தல தோனி தான் அடுத்த பிரதமர் - நெட்டிசன்கள் ட்விட்

விளையாட்டு
Updated Apr 22, 2019 | 17:52 IST | Times Now

ட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

CSK captain Dhoni, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி  |  Photo Credit: Twitter

பெங்களூர்: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ஐபிஎல் டி-20 தொடரின் 39-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. 

சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் போட்டியில் கேப்டன் தல தோனி 48 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். இந்நிலையில், ட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர்.

NEXT STORY
நம்ம தல தோனி தான் அடுத்த பிரதமர் - நெட்டிசன்கள் ட்விட் Description: ட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Loading...
Loading...
Loading...