ஐபிஎல் 2019: டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

விளையாட்டு
Updated May 11, 2019 | 00:08 IST | Times Now

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

chennai super kings win by 6 wickets
chennai super kings win by 6 wickets  |  Photo Credit: Twitter

விசாகப்பட்டினம்: ஐபிஎல் குவாலிபையர் 2 ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர்-2 ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் துவக்கம் தந்தனர். 6 பந்துகளை மட்டும் சந்தித்த பிரித்வி ஷா 5 ரன்னில் நடையை கட்டினார். அடுத்து வந்த மன்ரோ தவானுடன் ஜோடி சேர்ந்தார். ஹர்பஜன் வீசிய 5-வது ஓவரின் 2-வது பந்தில் ஷிகர் தவான் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 14 பந்துகளில் 3 பவுண்டரி உதவியுடன் 18 ரன்கள் மட்டுமே அவர் எடுத்தார்.

chennai super kings win by 6 wickets

சிறிது நேரம் நிதானமாக ஆடிய முன்ரோ 24 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தபோது ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 13, அக்ஸர் பட்டேல் 3, ரூதர்போர்டு 10, கீமா பவுல் 3, டிரென்ட் போல்ட் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது டெல்லி. விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ரிஷப் பண்ட் அதிரடியாக 25 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  

chennai super kings win by 6 wickets

இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. அமித் மிஸ்ரா 6 ரன்களுடனும், இஷாந்த் சர்மா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தீபக் சாஹர், ஜடேஜா, ஹர்பஜன் சிங், பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இம்ரான் தாகிர் ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

chennai super kings win by 6 wickets

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய டு பிளசிஸ் 39 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அவுட்டானார். 1 சிக்ஸர் 7 பவுண்டரி உதவியுடன் இந்த ரன்களை எடுத்தார். வாட்சன் 32 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.  

chennai super kings win by 6 wicketsசுரேஷ் ரெய்னா 11, தோனி 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். ராயுடு 20, பிராவோ (0) அவுட்டாகாமல் இருந்தனர். இந்த வெற்றி மூலம் ஐபிஎல் பைனலுக்கு சென்னை அணி தகுதி பெற்றது. ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு இது 100வது வெற்றி ஆகும்

NEXT STORY
ஐபிஎல் 2019: டெல்லியை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் Description: ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் இறுதி போட்டிக்கு முன்னேறியது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola