கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

விளையாட்டு
Updated May 16, 2019 | 12:31 IST | Times Now

ஜிம்பாப்வே, ஹராரேவில் வேண்டும் என்றே அடிக்கடி மின்தடையை உண்டாக்கி கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் பிரெண்டன் டெய்லர்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் பிரெண்டன் டெய்லர்  |  Photo Credit: Twitter

ஹராரே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வீரர் பிரெண்டன் டெய்லர் மனைவியிடம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான பிரெண்டன் டெய்லர். 188 ஒரு நாள் போட்டிகளிலும் 28 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள டெய்லர், தலைநகர் ஹராரேவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி சிலர் கொள்ளையடித்துச் சென்றதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரெண்டன் டெய்லர் ட்விட்டர் பதிவில், "வீட்டுக்கு வெளியே என் மனைவிக்காக காத்திருந்தேன். அப்போது திடீரென்று என் மனைவியின் அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று சுதாரித்து கொண்டு செல்வதற்குள், ஆயுதம் வைத்திருந்த 4 பேர் அவளிடம் கொள்ளையடித்துவிட்டு சிகப்பு நிற காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

 

 

நல்ல வேளையாக அவள் கைப்பையை மட்டும் இழந்தார். இது எச்சரிக்கை. பொதுமக்கள் விழிப்புடன் இருங்கள். இருட்டில் செல்லும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

ஹராரேவில் வேண்டும் என்றே அடிக்கடி மின்தடையை உண்டாக்கி கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசாரும் சமூக வலைதளம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.  
 

NEXT STORY
கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் Description: ஜிம்பாப்வே, ஹராரேவில் வேண்டும் என்றே அடிக்கடி மின்தடையை உண்டாக்கி கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles