டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டம் ? விசாரணையை தொடங்கியது பிசிசிஐ

விளையாட்டு
Updated Sep 16, 2019 | 16:53 IST | Times Now

”அடையாளம் தெரியாத யாரோ சிலர் வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவை வீரர்கள் அணுகினர். (குறுஞ்செய்தி அனுப்பியவர்கள்) யாராகவும் இருக்கலாம்.”

BCCI, பிசிசிஐ
பிசிசிஐ  |  Photo Credit: PTI

சென்னை: வாட்ஸ்ஆப் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை தொடர்பு கொண்டதாக தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குற்றம்சாட்டியதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.

சம்பத்தப்பட்ட வீரர்கள் தம்மிடம் முறையிட்டதாகவும் அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அஜித் சிங் கூறுகையில், " சூதாட்டம் தொடர்பாக சில வீரர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளோம். அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டது குறித்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்தோம். அடையாளம் தெரியாத யாரோ சிலர் வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியதை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவை வீரர்கள் அணுகினர். (குறுஞ்செய்தி அனுப்பியவர்கள்) யாராகவும் இருக்கலாம். ஆனால், சர்வதேச வீரர்கள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என உறுதியாக நம்புகிறோம்,” என்று கூறினார்.

சட்ட ஆலோசனை பெற்று அடுத்த சில நாட்களுக்குள் தமிழக காவல்துறையிடம் முதல் தகவலறிக்கை பதிவு செய்ய பிசிசிஐ ஊழல் தடுப்பு பிரிவு முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடைபெறும். ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பர். தொடரின் பெரும்பாலான போட்டிகள் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

2016-ம் ஆண்டு எம்.எஸ்.தோனி முன்னிலையில் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் அறிமுகமானது. 2017 மற்றும் 2019-ல் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி தொடரை கைப்பற்றியது. 

NEXT STORY