இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக பரத் அருண்?

விளையாட்டு
Updated Aug 28, 2019 | 13:35 IST | Times Now

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதவி பயிற்சியாளராக பரத் அருண்?, Bharat Arun likely to be Assistant Coach?
உதவி பயிற்சியாளராக பரத் அருண்?  |  Photo Credit: AP

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா வெளியேறியது. அந்த நேரத்தில் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்சியாளர்களின் பதவி காலமும் முடிவுக்கு வந்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை அவர்களது பதவி காலம் நீட்டிக்கப்பட்டு, தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங், பவுலிங் பயிற்சியாளர் உட்பட 7 பதவிகளுக்கு தேர்வு நடைபெற்றது. அதில் டாம் மூடி, மைக் ஹேசன் ஆகியோர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தபோதிலும் மீண்டும் ரவி சாஸ்திரியே தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதனை தொடர்ந்து இந்திய அணியின் பௌலிங் பயிற்சியாளராக பரத் அருணும், பில்ட்டிங் பயிற்சியாளராக ஆர்.ஸ்ரீதரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கருக்கு பதில் விக்ரம் ரதோர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றி வந்தார். ஆனால் அவர் பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படாததை தொடர்ந்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக யார் இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த பொறுப்பில் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருண் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பந்துவீச்சு அவர் பயிற்சியாளராக ஆன பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதால் அவர் உதவி பயிற்சியாளர் பொறுப்புக்கு சரியானவராக இருப்பார் என்று கருதப்படுகிறது. பிசிசிஐ தலைமை அதிகாரி ராகுல் ஜோஹ்ரி இந்தியா வந்த பிறகு, அவருடன் கலந்து ஆலோசித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...