வார்னரைப் பின்னுக்குத் தள்ளிய ஷாகிப், சச்சின் சாதனையை முறியடிப்பாரா?

விளையாட்டு
Updated Jun 25, 2019 | 13:34 IST | Times Now

பங்களாதேஷ் அணியின் வீரர் ஷாகிப் அல் ஹாசன் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்!

Shakib Al Hasan
ஷாகிப் அல் ஹாசன்  |  Photo Credit: AP

நடப்பு உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர  நாயகனான ஷாகிப் அல் ஹாசன் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 51 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.  

உலகக்கோப்பை தொடரில் நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹாசன் 69 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் பந்துவீச்சில் 5 விக்கெட்களையும் எடுத்தார். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டியில் அரைசதம் மற்றும் 5 விக்கெட் எடுத்த வீரர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங்கை தொடர்ந்து ஷாகிப் அல் ஹாசன் இந்த சாதனையை படைத்துள்ளார். 

இதன் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் 400 ரன்களுக்கு மேல் குவித்து, 10 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹாசன் அடைந்துள்ளார். மேலும் உலகக்கோப்பை தொடர்களில் 1000 ரன்கள் அடித்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையையும் இவர் நிகழ்த்தியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இவர் செய்துள்ள சாதனைகள் ஏராளம்.

 

 

நேற்று பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்கு தள்ளி 476 ரன்களுடன்  தற்போது ஷாகிப் அல் ஹாசன் முதல் இடத்தில் உள்ளார். மேலும் 2003-ஆம் ஆண்டு 11 இன்னிங்ஸில் விளையாடிய சச்சின் அந்த உலகக்கோப்பையில் மொத்தம் 673 ரன்களைக் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. சாகிப் இந்த உலகக்கோப்பையில் இதுவரை விளையாடி 476 ரன்கள் எடுத்துள்ளார். இன்னும் பங்களாதேஷுக்கு இரண்டு போட்டிகள் மீதம் உள்ளன. இவர், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் சதம் அடித்திருப்பதால், சற்று முயன்றால் சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் ஜாம்பவான்கள் தெரிவிக்கிறார்கள்.பங்களாதேஷ் ரசிகர்களும் அந்த நாளை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்!

NEXT STORY
வார்னரைப் பின்னுக்குத் தள்ளிய ஷாகிப், சச்சின் சாதனையை முறியடிப்பாரா? Description: பங்களாதேஷ் அணியின் வீரர் ஷாகிப் அல் ஹாசன் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்!
Loading...
Loading...
Loading...