உலகக்கோப்பை கிரிக்கெட் 2019.. மழையால் ரத்தானது வங்கதேசம் - இலங்கை போட்டி

விளையாட்டு
Updated Jun 11, 2019 | 19:42 IST | Times Now

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 

Bangladesh vs Sri Lanka match abandoned due to rain.
Bangladesh vs Sri Lanka match abandoned due to rain.   |  Photo Credit: Twitter

பிரிஸ்டல்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் மழை காரணமாக வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் வங்கதேசம் அணி இலங்கை அணியுடன் மோத இருந்தது. இந்த போட்டி பிரிஸ்டல் நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

நீண்ட நேரம் ஆகியும் மழையின் அளவு குறையாததால் டாஸ் போடாமலே ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.  இதையடுத்து, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் இலங்கை அணி தற்போது 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணி 3 புள்ளிகளுடன் 7வது இடம் வகிக்கிறது.

முன்னதாக, பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டாஸ் போடப்படாமலே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தென் ஆப்பிரிக்கா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 

NEXT STORY
உலகக்கோப்பை கிரிக்கெட் 2019.. மழையால் ரத்தானது வங்கதேசம் - இலங்கை போட்டி Description: வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola