உலகக்கோப்பை அரையிறுதி: ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தின் மேல் விமானம் பறக்க தடை !

விளையாட்டு
Updated Jul 09, 2019 | 17:28 IST | Times Now

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி நடைபெறும்ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மேல் விமானம் பறப்பதற்கு தடை.

Old Trafford stadium made 'No Fly Zone'
ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் மேல் விமானம் பறக்க தடை   |  Photo Credit: AP

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறுகிறது. போட்டி நடைபெறும் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தின் மேல் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹெட்டிங்லே மைதானத்தில் இந்தியா இலங்கை அணிகள் இடையே நடைபெற்ற லீக் போட்டியின் போது, மைதானத்தில் மேல் பறந்த விமானம் ஒன்றில் இந்தியா இனப்படுகொலை நிறுத்தவேண்டும் மற்றும் காஷ்மீரை விடுவிக்கவேண்டும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. இதனை கடுமையாக கண்டித்து இந்தியா கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி -க்கு கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம்  ஐ.சி.சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடித்தனர். பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மான்செஸ்டர் நகர அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து போட்டி நடைபெறும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தின் மேல் விமானம் பறக்க தடை விதித்தது.    

பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் பாதுகாப்பு குறித்து கண்டனம் தெரிவித்ததாகவும், அதையொட்டி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களிடம் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம் போட்டியின் போது 'நோ பிளை சோன்'ஆக மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்ததாகவும்  அவர் கூறியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் இந்த உலகக்கோப்பையில் நடப்பது இது 2-வது முறை. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு நீதி வேண்டும் என்ற வாசகங்களை கொண்டு விமானம் ஒன்று மைதானத்தின் மேல் பறந்தது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது போட்டி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. இங்கிலாந்து போலீசார் இன்னும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவருகிறது.   
 

NEXT STORY
உலகக்கோப்பை அரையிறுதி: ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தின் மேல் விமானம் பறக்க தடை ! Description: இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி நடைபெறும்ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மேல் விமானம் பறப்பதற்கு தடை.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola