19 நாட்களில் 5 தங்கப்பதக்கம் வென்ற ஹீமா தாஸ் - குவியும் பாராட்டுகள்!

விளையாட்டு
Updated Jul 22, 2019 | 12:44 IST | Times Now

இந்திய தடகள வீராங்களனை ஹீமா தாஸ் சர்வதேச அளவில் 19 நாட்களில் 5 தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Hima Das
ஹீமா தாஸ்  |  Photo Credit: ANI

இந்திய தடங்கள வீராங்கனை ஹீமா தாஸ் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில், 19 நாட்களில் 5 தங்கப்பதக்கம் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த 19 வயதே ஆனா ஹீமா தாஸ், ஜூலை 2-ஆம் தேதி ஐரோப்பாவில் தன் வெற்றிப்பயணத்தை தொடங்கினார். போலந்து போஸ்னான் 200 மீட்டர் தடகள போட்டியில் 23.65 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார் ஹீமா தாஸ். அதனை தொடர்ந்து குட்னோ, க்ளாட்னோ, தாபோர் ஆகிய நகரங்களில் நடைபெற்ற 200 மீட்டர் தடகள போட்டிகளிலும் தங்கம் வென்றார்.

200 மீட்டர் தடகள போட்டியில் அபார சாதனை படைத்த ஹீமா தாஸ் 400 மீட்டர் தடகள போட்டியிலும் முத்திரை பதித்தார். ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நோவ் மெஸ்டோ நாட் மெட்டுஜி கிராண்டு ப்ரிக்ஸில் 400 மீட்டரை 52.09 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன் மூலம் 19 நாட்களில் சர்வதேச அளவில் 5 தங்க பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார் ஹீமா தாஸ். அவரின் இந்த மாத சாதனைகள் இதோ!   

200 மீட்டர் தடகளம் 

  • ஜூலை 2 - 23.65 விநாடிகள் - போலந்து போஜான் தடகளம்
  • ஜூலை 7 - 23.97 விநாடிகள் - போலந்து குட்னோ தடகளம்
  • ஜூலை 13 - 23.43 விநாடிகள் - செக் குடியரசு க்ளாண்டோ தடகளம்
  • ஜூலை 17 - 23.25 விநாடிகள்- தாபோர் தடகளம்

400 மீட்டர் தடகளம் 

  • ஜூலை 20 - 52.09 விநாடிகள் - நோவ் மெஸ்டோ நாட் மெட்டுஜி கிராண்டு

தடகள போட்டியில் சர்வேதச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஹீமா தாஸுக்கு ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.  

 

 

 

 

 

 

 

 

இவரின் இந்த அசத்திய ஆட்டதாலும் தொடர் வெற்றியாலும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அசாமை சேர்ந்த ஹீமா தாஸ் தன் ஒரு மாத சம்பளத்தில் பாதியை அசாம் வெள்ள நிவாரணத்திற்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.   
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...