போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸ் தடகளம்: தங்கம் வென்றார் இந்தியாவின் சித்ரா!

விளையாட்டு
Updated Jun 19, 2019 | 18:37 IST | Times Now

ஆசிய சாம்பினான இந்தியாவின் பி.யூ.சித்ரா இந்த சீசனில் சிறந்த வெற்றியாக போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸ் தடகளம் 1500 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றுள்றளார்.

போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸில் தங்கம் வென்றார் சித்ரா
போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸில் தங்கம் வென்றார் சித்ரா  |  Photo Credit: PTI

ஸ்வீடன்: ஆசிய சாம்பினான இந்தியாவின் பி.யூ.சித்ரா இந்த சீசனில் சிறந்த வெற்றியாக போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸ் தடகளம் 1500 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றுள்றளார்.

தோகாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 1500 மீட்டரில் தங்கம் வென்ற பி.யூ.சித்ரா, போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸ் தடகளத்தில் 4 நிமிடம் 12.65 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து தங்கம் வென்றார். இப்போட்டியில், கென்யாவின் மெர்ஸி செரோனோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மெர்ஸி செரோனோ 2014 ஆம் ஆண்டு காமென்வெல்த் 5000 மீட்டரில் தங்கம் வென்றவர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் ஆடவர் 1500 மீட்டரில் 3 நிமிடம் 39.69 விநாடிகள் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 15 ஆம் தேதி நெதர்லாந்தில் நடைபெற்ற நெக்ஸ் ஜெனரேஸன் அத்லெட்டிக் போட்டியில் ஜான்சன் தனது சொந்த சாதனையை முடியத்தார்.

டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற மற்றொரு தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்துள்ள முரளி ஸ்ரீசங்கர் 7.93 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். 
 

NEXT STORY
போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸ் தடகளம்: தங்கம் வென்றார் இந்தியாவின் சித்ரா! Description: ஆசிய சாம்பினான இந்தியாவின் பி.யூ.சித்ரா இந்த சீசனில் சிறந்த வெற்றியாக போக்ஸாம் கிராண்ட்பிரிக்ஸ் தடகளம் 1500 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்றுள்றளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola